• Nov 25 2024

உடனடியாக ரத்து செய்யப்பட்ட தபால் ஊழியர்களின் விடுமுறை..!

Chithra / Aug 25th 2024, 9:14 am
image


அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டதாக ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

எவரேனும் அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின், மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி தபால் மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தபால் மூல வாக்குச் சீட்டுக்களை நாளையதினம் தபால் நிலையங்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் செப்டம்பர் 4ஆம், 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் தபால் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன. 

இந்தநிலையில் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் பாதுகாப்புடன் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

வாக்காளர் அட்டைகளின் விநியோக நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். 

இந்தப் பணிகளுக்கான விசேட தினமாக செப்டம்பர் 8ஆம் திகதி பிரகடனப்படுத்தப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


உடனடியாக ரத்து செய்யப்பட்ட தபால் ஊழியர்களின் விடுமுறை. அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டதாக ராஜித ரணசிங்க தெரிவித்தார்.எவரேனும் அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின், மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி தபால் மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை தபால் மூல வாக்குச் சீட்டுக்களை நாளையதினம் தபால் நிலையங்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 4ஆம், 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் தபால் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன. இந்தநிலையில் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் பாதுகாப்புடன் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டைகளின் விநியோக நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். இந்தப் பணிகளுக்கான விசேட தினமாக செப்டம்பர் 8ஆம் திகதி பிரகடனப்படுத்தப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement