• Nov 24 2024

ஜனாதிபதி உரையின் போது இடம்பெற்ற மின்வெட்டு - பாராளுமன்ற மின்தூக்கியில் சிக்கிய உறுப்பினர்கள்..!samugammedia

Tharun / Mar 3rd 2024, 4:21 pm
image

மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கானா நாட்டின் தலைநகரத்தில் உள்ள அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஜனாதிபதி நானா அகுபோ அட்டோ நாட்டு உரையாற்றி கொண்டிருந்த நிலையில் மின்சாரம் தடைபட்டுள்ளது 

உடனடியாக மின்சாரம் திரும்பும் என 'நினைத்து உறுப்பினர்கள் அமர்ந்திருந்த நிலையில், மின்சாரத்தடை நீடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 இதனால் அங்கிருந்த உறுப்பினர்கள் அனைவரும் குழப்பமடைந்து  அக்கன் மொழியில் மின்சார தடை எனும் பொருள்பட "டம்சர், டம்சர்" என கோஷமிட ஆரம்பித்தனர். சில நிமிடங்கள் கடந்ததும், உறுப்பினர்கள் அமர்ந்திருந்த சபைக்கு மட்டும் இயந்திர உதவியுடன் மின்சார வழங்கப்பட்டது.

இருந்த போதிலும் மின்சார சேவை பாராளுமன்றத்தின் பிறபகுதிகளுக்கு வரவில்லை. இதனால் மின்தூக்கியில் பயணித்த பல உறுப்பினர்கள் அதிலேயே சிக்கிக் கொள்ள நேர்ந்தது.

குறித்த இதேவேளை பாராளுமன்ற அலுவலகம் செலுத்த வேண்டிய மின்கட்டண நிலுவையை செலுத்துமாறு பல முறை அறிவுறுத்தல் வழங்கியும் கட்டணத்தை செலுத்தாததால் மின் தொடர்பை துண்டித்தோம். மின் தடை என்பது கட்டணம் செலுத்தாதவர்கள்  யாராக இருந்தாலும் மின் சாரத்தை துண்டிக்கப்படும் என அந்நாட்டு மின்சார நிறுவன செய்தித் தொடர்பாளர் வில்லியம் போடெங் தெரிவித்தார்.

கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அந்நாட்டின் அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வாங்க அரசால் முடியவில்லை. அந்நாளின் பிற்பகுதியில் கட்டணத்தின் ஒரு பகுதியை செலுத்திய பின்னே மின் தொடர்பு மீண்டும் வழங்கப்பட்டது.

கானா அரசு மின்சார துறைக்கு 1.8 மில்லியன் டொலர் கட்டண நிலுவை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

ஜனாதிபதி உரையின் போது இடம்பெற்ற மின்வெட்டு - பாராளுமன்ற மின்தூக்கியில் சிக்கிய உறுப்பினர்கள்.samugammedia மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கானா நாட்டின் தலைநகரத்தில் உள்ள அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஜனாதிபதி நானா அகுபோ அட்டோ நாட்டு உரையாற்றி கொண்டிருந்த நிலையில் மின்சாரம் தடைபட்டுள்ளது உடனடியாக மின்சாரம் திரும்பும் என 'நினைத்து உறுப்பினர்கள் அமர்ந்திருந்த நிலையில், மின்சாரத்தடை நீடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அங்கிருந்த உறுப்பினர்கள் அனைவரும் குழப்பமடைந்து  அக்கன் மொழியில் மின்சார தடை எனும் பொருள்பட "டம்சர், டம்சர்" என கோஷமிட ஆரம்பித்தனர். சில நிமிடங்கள் கடந்ததும், உறுப்பினர்கள் அமர்ந்திருந்த சபைக்கு மட்டும் இயந்திர உதவியுடன் மின்சார வழங்கப்பட்டது.இருந்த போதிலும் மின்சார சேவை பாராளுமன்றத்தின் பிறபகுதிகளுக்கு வரவில்லை. இதனால் மின்தூக்கியில் பயணித்த பல உறுப்பினர்கள் அதிலேயே சிக்கிக் கொள்ள நேர்ந்தது.குறித்த இதேவேளை பாராளுமன்ற அலுவலகம் செலுத்த வேண்டிய மின்கட்டண நிலுவையை செலுத்துமாறு பல முறை அறிவுறுத்தல் வழங்கியும் கட்டணத்தை செலுத்தாததால் மின் தொடர்பை துண்டித்தோம். மின் தடை என்பது கட்டணம் செலுத்தாதவர்கள்  யாராக இருந்தாலும் மின் சாரத்தை துண்டிக்கப்படும் என அந்நாட்டு மின்சார நிறுவன செய்தித் தொடர்பாளர் வில்லியம் போடெங் தெரிவித்தார்.கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அந்நாட்டின் அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வாங்க அரசால் முடியவில்லை. அந்நாளின் பிற்பகுதியில் கட்டணத்தின் ஒரு பகுதியை செலுத்திய பின்னே மின் தொடர்பு மீண்டும் வழங்கப்பட்டது.கானா அரசு மின்சார துறைக்கு 1.8 மில்லியன் டொலர் கட்டண நிலுவை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Advertisement

Advertisement

Advertisement