கடந்த பெப்ரவரி மாதம் ஒன்பதாம் திகதி நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டு மக்கள் அசௌகரியத்திற்குள்ளானமைக்கு காரணம் "சூரிய மின்சக்தி கட்டமைப்புகளே" என இலங்கை மின்சார சபையின் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக சூரிய மின்சக்தி தொழில்துறை சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் ஜாவித் காமில் -
இலங்கையின் கூரை சூரிய மின்சக்தித் துறையில் 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களையும் 40,000 தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சூரிய மின்சக்தித் தொழில்துறை சங்கம் (SIA), தொழில்துறையின் எதிர்காலத்தையும் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளையும் அச்சுறுத்தும் சமீபத்திய நடவடிக்கைகளையும் கடுமையாகக் கண்டிக்கிறது என்றார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த சங்கத்தின் செயலாளர் சஞ்சீவன் சிவஞானம் -
குறிப்பாக நாட்டின் வடபகுதியில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் இந்த தொழில் துறையை முன்னெடுக்க முடியாதவாறு பல தடங்கள்களையும் தடைகளையும் இலங்கை மின்சார சபை ஏற்படுத்தியுள்ளதோடு இது தொடர்பில் பல அமைப்புக்களோடும் அரசு துறை அதிகாரிகளோடும் பேச்சுவாய்த்தைகளை நடாத்தி வருகின்றோம். என்றார்.
நாடு முழுவதும் ஏற்பட்ட மின்தடை; மின்சார சபையின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த சூரிய மின்சக்தி தொழில்துறை கடந்த பெப்ரவரி மாதம் ஒன்பதாம் திகதி நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டு மக்கள் அசௌகரியத்திற்குள்ளானமைக்கு காரணம் "சூரிய மின்சக்தி கட்டமைப்புகளே" என இலங்கை மின்சார சபையின் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக சூரிய மின்சக்தி தொழில்துறை சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் ஜாவித் காமில் -இலங்கையின் கூரை சூரிய மின்சக்தித் துறையில் 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களையும் 40,000 தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சூரிய மின்சக்தித் தொழில்துறை சங்கம் (SIA), தொழில்துறையின் எதிர்காலத்தையும் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளையும் அச்சுறுத்தும் சமீபத்திய நடவடிக்கைகளையும் கடுமையாகக் கண்டிக்கிறது என்றார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த சங்கத்தின் செயலாளர் சஞ்சீவன் சிவஞானம் - குறிப்பாக நாட்டின் வடபகுதியில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் இந்த தொழில் துறையை முன்னெடுக்க முடியாதவாறு பல தடங்கள்களையும் தடைகளையும் இலங்கை மின்சார சபை ஏற்படுத்தியுள்ளதோடு இது தொடர்பில் பல அமைப்புக்களோடும் அரசு துறை அதிகாரிகளோடும் பேச்சுவாய்த்தைகளை நடாத்தி வருகின்றோம். என்றார்.