• Sep 08 2024

மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கக்கூடாது: அது ஆபத்தானது- எச்சரித்தார் அனுராதா யஹம்பத்!

Tamil nila / Feb 1st 2023, 3:49 pm
image

Advertisement

13வது திருத்த சட்டத்தின் ஊடாக மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கக்கூடாதென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


குறிப்பாக நான்கு அல்லது ஜந்து நிர்வாக கட்டமைப்புகள் காணப்படுகின்றமையே இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தாம் கருதுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் குறிப்பிட்டுள்ளார்.


கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.


மாகாணசபை ஊடாக அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் தீர்மானித்தால் அதனை நன்றாக ஆராயவேண்டும் என்றும் அதிகாரங்களை வழங்குவது என்றால் புதிய அரசியலமைப்பு ஒன்றை முதலில் உருவாக்க வேண்டும் என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிடுகின்றார்.


மாகாணங்களுக்கிடையில் அதிகாரங்கள் பகிரப்படக்கூடாது என்றும் அது ஆபத்தானது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கக்கூடாது: அது ஆபத்தானது- எச்சரித்தார் அனுராதா யஹம்பத் 13வது திருத்த சட்டத்தின் ஊடாக மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கக்கூடாதென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.குறிப்பாக நான்கு அல்லது ஜந்து நிர்வாக கட்டமைப்புகள் காணப்படுகின்றமையே இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தாம் கருதுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் குறிப்பிட்டுள்ளார்.கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.மாகாணசபை ஊடாக அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் தீர்மானித்தால் அதனை நன்றாக ஆராயவேண்டும் என்றும் அதிகாரங்களை வழங்குவது என்றால் புதிய அரசியலமைப்பு ஒன்றை முதலில் உருவாக்க வேண்டும் என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிடுகின்றார்.மாகாணங்களுக்கிடையில் அதிகாரங்கள் பகிரப்படக்கூடாது என்றும் அது ஆபத்தானது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement