• May 18 2024

ஊடகவியலாளர் நிபோஜனின் பூதவுடல் மக்கள் வெள்ளத்தின் நடுவில் நல்லடக்கம்.!

Sharmi / Feb 1st 2023, 4:02 pm
image

Advertisement

விபத்தில் அகால மரணமடைந்த கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளரான நிற்சிங்கம் நிபோஜனின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோட்டையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்தது.

அன்னாரின் பூதவுடலுக்கு ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் தமது இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கிளிநொச்சி மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் பாரிய சேவையாற்றியிருந்துடன் இறுதிவரை ஊடகத் துறைக்காக கடமையாற்றியிருந்தார்.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளை அறிக்கையிடுதலினூடாக பன்னெடுங்காலமாக தீர்க்கப்படாத அவர்களின் பிரச்சினைகள் தீரும் என்ற வேட்கையுடன் செயலாற்றியிருந்தார்.

ஒரு பிள்ளையின் தந்தையான நிற்சிங்கம் நிபோஜன், மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த தொடருந்தில் இருந்து வீழ்ந்து நேற்று முன்தினம் மாலை உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




ஊடகவியலாளர் நிபோஜனின் பூதவுடல் மக்கள் வெள்ளத்தின் நடுவில் நல்லடக்கம். விபத்தில் அகால மரணமடைந்த கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளரான நிற்சிங்கம் நிபோஜனின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன.கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோட்டையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்தது.அன்னாரின் பூதவுடலுக்கு ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் தமது இறுதி அஞ்சலி செலுத்தினர். கிளிநொச்சி மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் பாரிய சேவையாற்றியிருந்துடன் இறுதிவரை ஊடகத் துறைக்காக கடமையாற்றியிருந்தார். கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளை அறிக்கையிடுதலினூடாக பன்னெடுங்காலமாக தீர்க்கப்படாத அவர்களின் பிரச்சினைகள் தீரும் என்ற வேட்கையுடன் செயலாற்றியிருந்தார்.ஒரு பிள்ளையின் தந்தையான நிற்சிங்கம் நிபோஜன், மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த தொடருந்தில் இருந்து வீழ்ந்து நேற்று முன்தினம் மாலை உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement