• May 02 2024

பிரபாகரனின் மரணம் தொடர்பில் ஆராய வேண்டிய தேவையில்லை- சிறீதரன் கருத்து! SamugamMedia

Sharmi / Feb 14th 2023, 9:51 am
image

Advertisement

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனும், நலமுடனும் இருப்பதாகவும்,உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார் என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.

பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இணைய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் தேசிய தலைவரின் வருகைக்காக உலக வாழ் தமிழ் மக்கள் காத்திருக்கின்றோம்.அவரின் வருகை பழ.நெடுமாறனின் கருத்துப்போன்று உண்மையாக வேண்டும்.

அவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் வந்தாள். உலகில் சிறந்த இனமாக தமிழினம் அடையாளப்படுத்தப்படும். அதற்காக காத்திருக்கின்றோம்.

மேலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் வருவார் என்ற போது அவரின் மரணம் தொடர்பான செய்திகளை ஆராய வேண்டிய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

பிரபாகரனின் மரணம் தொடர்பில் ஆராய வேண்டிய தேவையில்லை- சிறீதரன் கருத்து SamugamMedia விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனும், நலமுடனும் இருப்பதாகவும்,உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார் என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.இந்நிலையில், பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இணைய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில்,தமிழ் மக்களின் தேசிய தலைவரின் வருகைக்காக உலக வாழ் தமிழ் மக்கள் காத்திருக்கின்றோம்.அவரின் வருகை பழ.நெடுமாறனின் கருத்துப்போன்று உண்மையாக வேண்டும். அவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் வந்தாள். உலகில் சிறந்த இனமாக தமிழினம் அடையாளப்படுத்தப்படும். அதற்காக காத்திருக்கின்றோம்.மேலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் வருவார் என்ற போது அவரின் மரணம் தொடர்பான செய்திகளை ஆராய வேண்டிய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement