• May 17 2024

தேராவில் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்! இராணுவத்திடமிருந்து காணியை விடுவிக்குமாறும் கோரிக்கை samugammedia

Chithra / Nov 5th 2023, 2:23 pm
image

Advertisement



மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்வதற்க்காக தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இலங்கை இராணுவத்தின் 14 வது SLNG  படைப்பிரிவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள  தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. 

இவ்வாண்டும் கார்த்திகை 27 மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக இடம்பெறும் எனவும் அனைத்து மாவீரர் பெற்றோர் உறவுகளையும்  கலந்துகொள்ளுமாறும் முன்னாயத்த பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிக்குழுவினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருந்து துயிலும் இல்லத்திற்கு வருவதற்க்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தங்குமிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு அனைவரையும் பங்கேற்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்

அத்தோடு மாவீரர் நாளினை நினைவு கூறுவதற்கான உரிய இடவசதி இல்லாது தாம் துன்பப்படுவதாகவும்  குறித்த காணியை இராணுவத்திடம் இருந்து விடுவித்து உதவுமாறும் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தேராவில் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம் இராணுவத்திடமிருந்து காணியை விடுவிக்குமாறும் கோரிக்கை samugammedia மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்வதற்க்காக தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கை இராணுவத்தின் 14 வது SLNG  படைப்பிரிவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள  தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இவ்வாண்டும் கார்த்திகை 27 மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக இடம்பெறும் எனவும் அனைத்து மாவீரர் பெற்றோர் உறவுகளையும்  கலந்துகொள்ளுமாறும் முன்னாயத்த பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிக்குழுவினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருந்து துயிலும் இல்லத்திற்கு வருவதற்க்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தங்குமிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு அனைவரையும் பங்கேற்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்அத்தோடு மாவீரர் நாளினை நினைவு கூறுவதற்கான உரிய இடவசதி இல்லாது தாம் துன்பப்படுவதாகவும்  குறித்த காணியை இராணுவத்திடம் இருந்து விடுவித்து உதவுமாறும் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement