• May 06 2025

வியட்நாமில் போர் வீரர்கள் நினைவிடத்தில் ஜனாதிபதி அநுர மலர் அஞ்சலி..!

Sharmi / May 5th 2025, 4:28 pm
image

வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (05) முற்பகல் ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் ஜனாதிபதி மாளிகையில் உள்ள ஹோ சி மின் நினைவிடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, சுதந்திரப் போராட்டத் தலைவரும், சுதந்திர வியட்நாமின் முதல் ஜனாதிபதியுமான ஹோ சி மின் இன் அஸ்தி அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.




வியட்நாமில் போர் வீரர்கள் நினைவிடத்தில் ஜனாதிபதி அநுர மலர் அஞ்சலி. வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (05) முற்பகல் ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.பின்னர் ஜனாதிபதி மாளிகையில் உள்ள ஹோ சி மின் நினைவிடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, சுதந்திரப் போராட்டத் தலைவரும், சுதந்திர வியட்நாமின் முதல் ஜனாதிபதியுமான ஹோ சி மின் இன் அஸ்தி அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement