• Feb 27 2025

ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் ஜனாதிபதி அநுர விசேட உத்தரவு..!

Sharmi / Feb 27th 2025, 10:51 am
image

நாட்டு மக்களிடையே அமைதியை பேணுவதற்கான  தேவையை கருத்திற் கொண்டு ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைத்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். 

ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்றையதினம்(27) சபைக்கு அறிவித்துள்ளார். 

இன்று காலை 9.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து சபாநாயகர் இந்த உத்தரவை சபைக்கு அறிவித்திருந்தார்.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின்(அத்தியாயம் 40) 12வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் ஜனாதிபதி அநுர விசேட உத்தரவு. நாட்டு மக்களிடையே அமைதியை பேணுவதற்கான  தேவையை கருத்திற் கொண்டு ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைத்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்றையதினம்(27) சபைக்கு அறிவித்துள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து சபாநாயகர் இந்த உத்தரவை சபைக்கு அறிவித்திருந்தார்.பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின்(அத்தியாயம் 40) 12வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement