தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவுக்கு ஜனாதிபதி தமது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர, திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 6 ஆம் திகதி உயிரிழந்தார்.
உயிரிழக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவுக்கு வயது 38 ஆகும்.
இந்நிலையில் அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், கோஷல நுவன் ஜயவீரவின் பூதவுடலுக்கு நேற்றையதினம் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறைந்த கோஷல நுவன் ஜயவீரவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி. தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவுக்கு ஜனாதிபதி தமது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர, திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 6 ஆம் திகதி உயிரிழந்தார்.உயிரிழக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவுக்கு வயது 38 ஆகும்.இந்நிலையில் அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில், கோஷல நுவன் ஜயவீரவின் பூதவுடலுக்கு நேற்றையதினம் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.