• May 19 2024

ஜனாதிபதியின் சிம்மாசன உரையை புறக்கணித்த பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

Chithra / Feb 8th 2023, 10:10 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிம்மாசன உரையை பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று புறக்கணித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன இந்த உரையை புறக்கணித்தன.

மேலும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வரவில்லை.

துப்பாக்கி வணக்கங்கள் மற்றும் வாகன பேரணிகள் இன்றி சம்பிரதாயபூர்வமாக பாராளுமன்ற திறப்பு விழா இன்று நடைபெற்றது.

சம்பிரதாயபூர்வமாக அமர்வு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 33 ஆவது சரத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய அரசாங்க கொள்கை அறிக்கையை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நான்காவது அமர்வின் சம்பிரதாய திறப்பு விழாவை சம்பிரதாயமான வைபவமாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் துப்பாக்கி வணக்கங்கள் மற்றும் வாகனப் பேரணிகள் நடைபெறவில்லை.

கோட்டே ஜனாதிபதி பெண்கள் கல்லூரி மாணவிகள் ஜெயமங்கல கீதம் பாடி ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தை ஆசீர்வதித்தனர்.

ஜனாதிபதியின் சிம்மாசன உரையை புறக்கணித்த பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிம்மாசன உரையை பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று புறக்கணித்தனர்.ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன இந்த உரையை புறக்கணித்தன.மேலும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வரவில்லை.துப்பாக்கி வணக்கங்கள் மற்றும் வாகன பேரணிகள் இன்றி சம்பிரதாயபூர்வமாக பாராளுமன்ற திறப்பு விழா இன்று நடைபெற்றது.சம்பிரதாயபூர்வமாக அமர்வு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 33 ஆவது சரத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய அரசாங்க கொள்கை அறிக்கையை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நான்காவது அமர்வின் சம்பிரதாய திறப்பு விழாவை சம்பிரதாயமான வைபவமாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் துப்பாக்கி வணக்கங்கள் மற்றும் வாகனப் பேரணிகள் நடைபெறவில்லை.கோட்டே ஜனாதிபதி பெண்கள் கல்லூரி மாணவிகள் ஜெயமங்கல கீதம் பாடி ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தை ஆசீர்வதித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement