• May 19 2024

வரிகளை ரத்து செய்வது சாத்தியமில்லை- அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Sharmi / Feb 8th 2023, 10:24 am
image

Advertisement

அரசாங்கம் விருப்பத்துடன் இந்த வரி அறவிடும் முறையை நடைமுறைப்படுத்தவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்ற கூட்டதொடரை ஆரம்பித்து வைத்த பின்னர் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையில் ரணில் விக்கிரமசிஙக் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ஆனாலும் எமக்கு விருப்பமானவற்றை செய்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது.விரும்பாவிட்டாலும் சரியானவற்றையே செய்ய வேண்டும். உழைக்கும்போதே செலுத்தும் வரியை நீக்கினால் நாடு 100 பில்லியன் ரூபாவை இழக்கும். வரி எல்லையை இரண்டு இலட்சம் வரை அதிகரித்தால் நாடு 63 பில்லியன் ரூபாவை இழக்கும் இழக்கப்படும் மொத்த தொகை 163 பில்லியன் ரூபாவாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வளவு நிதியிழப்பினை தாங்கிக்கொள்ளும் நிலையில் நாம் இல்லை. தற்போது நலிவுற்றுள்ள பொருளாதாரத்திற்கு உரிமை கோருவதன் காரணமாக அனைவராலும் வரிச்சுமை பாரிய அளவில் உணரப்படுவதை நாம் அறிவோம்.

தற்போது எமது நாட்டில் கூடுதலான வரியை மக்களே செலுத்துகின்றார்கள் நேரடியாக வரி செலுத்தவேண்டிய நபர்களிடம் மற்றும் நிறுவனங்களிடம் உரிய முறையில் வரி அறிவிடப்படாமை காரணமாக அனைத்து இலங்கையர்களும் மறைமுக வரியாக பெருந்தொகை பணத்தை செலுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் வரி செலுத்த தேவையில்லாதவர்கள் கூட மறைமுகமாக வரி செலுத்துகின்றனர்.எனவே இந்த வரி முரண்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

வரிகளை ரத்து செய்வது சாத்தியமில்லை- அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு அரசாங்கம் விருப்பத்துடன் இந்த வரி அறவிடும் முறையை நடைமுறைப்படுத்தவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்ற கூட்டதொடரை ஆரம்பித்து வைத்த பின்னர் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையில் ரணில் விக்கிரமசிஙக் இவ்வாறு தெரிவித்திருந்தார்.ஆனாலும் எமக்கு விருப்பமானவற்றை செய்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது.விரும்பாவிட்டாலும் சரியானவற்றையே செய்ய வேண்டும். உழைக்கும்போதே செலுத்தும் வரியை நீக்கினால் நாடு 100 பில்லியன் ரூபாவை இழக்கும். வரி எல்லையை இரண்டு இலட்சம் வரை அதிகரித்தால் நாடு 63 பில்லியன் ரூபாவை இழக்கும் இழக்கப்படும் மொத்த தொகை 163 பில்லியன் ரூபாவாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வளவு நிதியிழப்பினை தாங்கிக்கொள்ளும் நிலையில் நாம் இல்லை. தற்போது நலிவுற்றுள்ள பொருளாதாரத்திற்கு உரிமை கோருவதன் காரணமாக அனைவராலும் வரிச்சுமை பாரிய அளவில் உணரப்படுவதை நாம் அறிவோம். தற்போது எமது நாட்டில் கூடுதலான வரியை மக்களே செலுத்துகின்றார்கள் நேரடியாக வரி செலுத்தவேண்டிய நபர்களிடம் மற்றும் நிறுவனங்களிடம் உரிய முறையில் வரி அறிவிடப்படாமை காரணமாக அனைத்து இலங்கையர்களும் மறைமுக வரியாக பெருந்தொகை பணத்தை செலுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் வரி செலுத்த தேவையில்லாதவர்கள் கூட மறைமுகமாக வரி செலுத்துகின்றனர்.எனவே இந்த வரி முரண்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement