• May 21 2024

பாரம்பரியத்தை மாற்றிய ஜனாதிபதி - வரவு - செலவு திட்டத்தின் பின் நடந்த விருந்து..! samugammedia

Chithra / Nov 14th 2023, 8:00 am
image

Advertisement



இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அதிதிகளுக்கு மதிய விருந்தொன்றை வழங்கினார். 

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் பாரம்பரிய தேநீர் வைபவத்திற்குப் பதிலாக, ஜனாதிபதி விருந்து வழங்கியுள்ளார். 

நேற்று நண்பகல் 12.00 மணிக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகி பிற்பகல் 02.00 மணியுடன் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு நிறைவடைந்தது. 

இதையடுத்து மதிய விருந்து வழங்கப்பட்டதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர். 


எனினும், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவில்லை. 

எனினும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த விருந்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

வரவு செலவுத் திட்ட உரையின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரம்பரியமாக தேநீர் விருந்து நடத்தப்படும். 

ஆனால் இம்முறை பிற்பகல் வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி ஆற்றியதால் மதிய உணவு வழங்கப்பட்டதென கூறப்பட்டுள்ளது.

பாரம்பரியத்தை மாற்றிய ஜனாதிபதி - வரவு - செலவு திட்டத்தின் பின் நடந்த விருந்து. samugammedia இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அதிதிகளுக்கு மதிய விருந்தொன்றை வழங்கினார். வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் பாரம்பரிய தேநீர் வைபவத்திற்குப் பதிலாக, ஜனாதிபதி விருந்து வழங்கியுள்ளார். நேற்று நண்பகல் 12.00 மணிக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகி பிற்பகல் 02.00 மணியுடன் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து மதிய விருந்து வழங்கப்பட்டதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர். எனினும், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவில்லை. எனினும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த விருந்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. வரவு செலவுத் திட்ட உரையின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரம்பரியமாக தேநீர் விருந்து நடத்தப்படும். ஆனால் இம்முறை பிற்பகல் வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி ஆற்றியதால் மதிய உணவு வழங்கப்பட்டதென கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement