• Apr 30 2024

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பம் ஒன்றிற்கு நேர்ந்த கதி – துயர சம்பவம்…! samugammedia

Chithra / Nov 14th 2023, 7:54 am
image

Advertisement


அவுஸ்திரேலியாவில் இலங்கையர் குடும்பம் ஒன்று குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட துசித மற்றும் அவரது மனைவி நிலந்தியால் ஆகியோரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலின் போது அவர்களது விசேட தேவையுடைய மகளும் உடனிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் குறித்த தாக்குதலின் பின்னர் சிறுமி அதிர்ச்சியில் இருப்பதாகவும் துசித ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்லாரட் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், தாக்குதலுக்கு எதிராக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் துசித குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் தாக்குதல் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரீவி கருவிகள் எதுவும் வேலை செய்யவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் 10 வருடங்களாக மெல்போர்னில் வசிப்பதாகவும், இந்த எதிர்பாராத சம்பவத்தால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பம் ஒன்றிற்கு நேர்ந்த கதி – துயர சம்பவம்… samugammedia அவுஸ்திரேலியாவில் இலங்கையர் குடும்பம் ஒன்று குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.அதாவது அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட துசித மற்றும் அவரது மனைவி நிலந்தியால் ஆகியோரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.தாக்குதலின் போது அவர்களது விசேட தேவையுடைய மகளும் உடனிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.அத்துடன் குறித்த தாக்குதலின் பின்னர் சிறுமி அதிர்ச்சியில் இருப்பதாகவும் துசித ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.இதேவேளை, பல்லாரட் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், தாக்குதலுக்கு எதிராக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் துசித குற்றம் சுமத்தியுள்ளார்.மேலும் தாக்குதல் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரீவி கருவிகள் எதுவும் வேலை செய்யவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இவர்கள் 10 வருடங்களாக மெல்போர்னில் வசிப்பதாகவும், இந்த எதிர்பாராத சம்பவத்தால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement