• Jun 28 2024

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட வெற்றி, தோல்வி அல்ல...! மனம் திறந்த ஜனாதிபதி ரணில்

Chithra / Jun 12th 2024, 11:40 am
image

Advertisement

 


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

பொருளாதார சீர்திருத்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து கொள்ளும் இளைஞர் பிரதிநிதிகளுடன் பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்ற கொள்கை சீர்திருத்தம் தொடர்பான கருத்தாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அதன்படி முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்னவின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரச சேவையில் உள்ள பல்வேறு சேவைப் பிரிவுகளுக்கிடையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து உரிய கவனம் செலுத்தி, 

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அரச சேவையின் அனைத்துத் துறைகளிலும் உள்ள சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மீளாய்வு செய்து திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை நிபுணர் குழு சமர்ப்பிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட வெற்றி, தோல்வி அல்ல. மனம் திறந்த ஜனாதிபதி ரணில்  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்பொருளாதார சீர்திருத்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து கொள்ளும் இளைஞர் பிரதிநிதிகளுடன் பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்ற கொள்கை சீர்திருத்தம் தொடர்பான கருத்தாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.அதன்படி முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்னவின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.மேலும் அரச சேவையில் உள்ள பல்வேறு சேவைப் பிரிவுகளுக்கிடையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து உரிய கவனம் செலுத்தி, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அரச சேவையின் அனைத்துத் துறைகளிலும் உள்ள சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மீளாய்வு செய்து திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை நிபுணர் குழு சமர்ப்பிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement