• Nov 22 2024

நிலவும் சீரற்ற வானிலை...! கிளிநொச்சியில் 3440 பேர் பாதிப்பு...!samugammedia

Sharmi / Dec 16th 2023, 2:50 pm
image

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் சீரற்ற வானிலையால் 1086 குடும்பங்களை சேர்ந்த 3440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று(16)  மதியம் வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாள் பிரிவில், 247 குடும்பங்களை சேர்ந்த 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

கண்டாவளை பிரதேச செயலாள் பிரிவில், 839 குடும்பங்களை சேர்ந்த 2606 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 16 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளம் வடிந்து வரும் நிலையில், தொடர்ந்தும் புள்ளி விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றது. இதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்ந்தும் மக்களுக்கான எதிர்வு கூறல் உள்ளமையால், மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை. கிளிநொச்சியில் 3440 பேர் பாதிப்பு.samugammedia கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் சீரற்ற வானிலையால் 1086 குடும்பங்களை சேர்ந்த 3440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.இன்று(16)  மதியம் வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கரைச்சி பிரதேச செயலாள் பிரிவில், 247 குடும்பங்களை சேர்ந்த 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. கண்டாவளை பிரதேச செயலாள் பிரிவில், 839 குடும்பங்களை சேர்ந்த 2606 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 16 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.வெள்ளம் வடிந்து வரும் நிலையில், தொடர்ந்தும் புள்ளி விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றது. இதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.தொடர்ந்தும் மக்களுக்கான எதிர்வு கூறல் உள்ளமையால், மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement