• May 07 2024

இலங்கையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் விலை குறைப்பு! samugammedia

Chithra / Jun 26th 2023, 9:27 am
image

Advertisement

60 வகையான மருந்துகளின் விலைகள் இன்று (26) முதல் 16% குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

புதிய விலை திருத்தத்தின் பிரகாரம் 16% விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதுடன் டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 500 மில்லிகிராம் எடையுள்ள பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபா 49 காசுகளாக கணக்கிடப்பட்டுள்ள அதேவேளை, இன்சுலின் 10 மில்லிகிராம் குப்பியின் அதிகபட்ச சில்லறை விலை 2270 ரூபா 2 சதமாகும்.

375 மில்லி கிராம் அமோக்ஸிசிலின் கிளாவுலினிக் அமிலத்தின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபா 32 காசுகளாகும்.


இலங்கையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் விலை குறைப்பு samugammedia 60 வகையான மருந்துகளின் விலைகள் இன்று (26) முதல் 16% குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வருகிறது.புதிய விலை திருத்தத்தின் பிரகாரம் 16% விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதுடன் டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 500 மில்லிகிராம் எடையுள்ள பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபா 49 காசுகளாக கணக்கிடப்பட்டுள்ள அதேவேளை, இன்சுலின் 10 மில்லிகிராம் குப்பியின் அதிகபட்ச சில்லறை விலை 2270 ரூபா 2 சதமாகும்.375 மில்லி கிராம் அமோக்ஸிசிலின் கிளாவுலினிக் அமிலத்தின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபா 32 காசுகளாகும்.

Advertisement

Advertisement

Advertisement