• May 19 2024

சஜித்துடன் தொலைபேசியில் உரையாடிய ரணில் விக்கிரமசிங்க – வெளியான தகவல்..!samugammedia

Sharmi / Jun 26th 2023, 9:27 am
image

Advertisement

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவருடனும் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.

அத்துடன் சில நிபந்தனைகளை அரசாங்கம் பூர்த்தி செய்யப்படாவிட்டால், ஜூலை மாதம் 01 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள,உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என்றும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் கடன் குறைப்பு நடவடிக்கைக்கு சென்றால், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தை தமது கட்சி ஆதரிக்காது என்றும் வைப்பாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை எதிர்வரும் 28 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பித்து, 29 ஆம் திகதி பொது நிதிக் குழுவுக்குப் பரிந்துரைத்து, சனிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கான திட்டங்களை எதிர்க்கட்சிகள் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் தொடர்பில் தம்முடனும் எதிர்க்கட்சித் தலைவருடனும் தொலைபேசியில் உரையாடியதாக குறிப்பிட்டார்.

எனினும் அந்த தொலைபேசி உரையாடல் தொடர்பான விபரங்களை அவர் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சஜித்துடன் தொலைபேசியில் உரையாடிய ரணில் விக்கிரமசிங்க – வெளியான தகவல்.samugammedia உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவருடனும் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.அத்துடன் சில நிபந்தனைகளை அரசாங்கம் பூர்த்தி செய்யப்படாவிட்டால், ஜூலை மாதம் 01 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள,உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என்றும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கம் கடன் குறைப்பு நடவடிக்கைக்கு சென்றால், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தை தமது கட்சி ஆதரிக்காது என்றும் வைப்பாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.அத்துடன் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை எதிர்வரும் 28 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பித்து, 29 ஆம் திகதி பொது நிதிக் குழுவுக்குப் பரிந்துரைத்து, சனிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கான திட்டங்களை எதிர்க்கட்சிகள் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் தொடர்பில் தம்முடனும் எதிர்க்கட்சித் தலைவருடனும் தொலைபேசியில் உரையாடியதாக குறிப்பிட்டார்.எனினும் அந்த தொலைபேசி உரையாடல் தொடர்பான விபரங்களை அவர் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement