• Nov 28 2024

மரக்கறிகளின் விலையேற்றம்...! வீட்டுத் தோட்டம் செய்யுங்கள்...! விவசாய அமைச்சர் ஆலோசனை...!samugammedia

Sharmi / Jan 18th 2024, 10:40 am
image

இலங்கையில் மரக்கறிகளின் விலை உயர்வைத் தணிக்க வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்குமாறு பொதுமக்களிடம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் பெய்த கடும் மழையினால் பல மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக தற்போது மரக்கறிகளுக்கு அதிக விலை அறவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே, மிளகாய், தக்காளி, பல்வேறு கீரைகள் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கொண்ட வீட்டுத் தோட்டத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

விலைவாசி உயர்வுக்காக என்னையும், விவசாய அமைச்சையும் பலர் திட்டுகிறார்கள். கனமழையால் காய்கறி தோட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது.

இதற்கு தீர்வாக வீட்டுத்தோட்டத்தை பராமரிப்பதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

மரக்கறிகளின் விலையேற்றம். வீட்டுத் தோட்டம் செய்யுங்கள். விவசாய அமைச்சர் ஆலோசனை.samugammedia இலங்கையில் மரக்கறிகளின் விலை உயர்வைத் தணிக்க வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்குமாறு பொதுமக்களிடம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த காலங்களில் பெய்த கடும் மழையினால் பல மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக தற்போது மரக்கறிகளுக்கு அதிக விலை அறவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.எனவே, மிளகாய், தக்காளி, பல்வேறு கீரைகள் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கொண்ட வீட்டுத் தோட்டத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார்.விலைவாசி உயர்வுக்காக என்னையும், விவசாய அமைச்சையும் பலர் திட்டுகிறார்கள். கனமழையால் காய்கறி தோட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது.இதற்கு தீர்வாக வீட்டுத்தோட்டத்தை பராமரிப்பதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement