• Mar 29 2024

இலங்கையில் சடுதியாக குறையவுள்ள பொருட்களின் விலைகள் - வெளியான அறிவிப்பு samugammedia

Chithra / Apr 1st 2023, 7:19 am
image

Advertisement

சந்தையில் மீன்களின் விலை 25 வீதம் அளவில் குறைவடையக்கூடும் என பேலியகொடை மத்திய கடலுணவு வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டமையால், முன்னர் கடற்றொழிலுக்கு செல்லாதிருந்தவர்கள், தற்போது தங்களது தொழிலை மீள ஆரம்பித்துள்ளனர்.


இதனால், கடலுணவுகள் அதிகளவில் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சிற்றுண்டிகளின் விலைகள், நாளைய தினம் குறைக்கப்பட உள்ளதாக, அகில இலங்கை சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.


எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் இலாபத்தை, பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள், பிஸ்கட்டுகள், சவர்க்காரம் உள்ளிட்ட பொருட்களின், அதிகரிக்கப்பட்ட விலைகளை, இந்த வாரத்தில் குறைக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அசேல சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் சடுதியாக குறையவுள்ள பொருட்களின் விலைகள் - வெளியான அறிவிப்பு samugammedia சந்தையில் மீன்களின் விலை 25 வீதம் அளவில் குறைவடையக்கூடும் என பேலியகொடை மத்திய கடலுணவு வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலை குறைக்கப்பட்டமையால், முன்னர் கடற்றொழிலுக்கு செல்லாதிருந்தவர்கள், தற்போது தங்களது தொழிலை மீள ஆரம்பித்துள்ளனர்.இதனால், கடலுணவுகள் அதிகளவில் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, சிற்றுண்டிகளின் விலைகள், நாளைய தினம் குறைக்கப்பட உள்ளதாக, அகில இலங்கை சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் இலாபத்தை, பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள், பிஸ்கட்டுகள், சவர்க்காரம் உள்ளிட்ட பொருட்களின், அதிகரிக்கப்பட்ட விலைகளை, இந்த வாரத்தில் குறைக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அசேல சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement