• Apr 13 2025

பிரதமர் ஹரிணி மன்னாருக்கு திடீர் விஜயம்: குவிக்கப்பட்ட பாதுகாப்பு தரப்பினர்.!

Sharmi / Apr 12th 2025, 6:20 pm
image

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்றைய தினம்(12) மதியம் மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது மன்னார் நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து  நானாட்டான் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்ட பிரதமர்,  வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினார்.

இதன் போது தேசிய மக்கள் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மா.ஜெகதீஸ்வரன்,செ.திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

அதேவேளை இன்றையதினம் பிரதமரின் நானாட்டான் பகுதிக்கான விஜயத்தையொட்டி நானாட்டான் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.








பிரதமர் ஹரிணி மன்னாருக்கு திடீர் விஜயம்: குவிக்கப்பட்ட பாதுகாப்பு தரப்பினர். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்றைய தினம்(12) மதியம் மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.இதன்போது மன்னார் நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து  நானாட்டான் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்ட பிரதமர்,  வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினார்.இதன் போது தேசிய மக்கள் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மா.ஜெகதீஸ்வரன்,செ.திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்அதேவேளை இன்றையதினம் பிரதமரின் நானாட்டான் பகுதிக்கான விஜயத்தையொட்டி நானாட்டான் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement