• Apr 13 2025

செம்பியன்பற்றில் இருந்து வெளியேறும் கரைவலை தொழிலாளர்கள்

Thansita / Apr 12th 2025, 7:41 pm
image

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் அமைந்திருந்த கரைவலை வாடிகளை அகற்றும் பணி இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

செம்பியன்பற்று சென் பிலிப்நேரிஸ் கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய சங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உழவியந்திரம் கொண்டு கரவலை தொழில் செய்வது  முற்றாக  தடை செய்யப்பட்டது

இதனை மீறி பல மாதங்களாக அப்பகுதியில் உழவு இயந்திரம் கொண்டு  தொழில்புரிந்து வந்த கரைவலை தொழிலாளர்களை அகற்றும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது

பொலிஸார் மற்றும் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளின் உத்தரவுக்கமைய  குறித்த பகுதிகளில் பணிபுரிந்த கரைவலை தொழிலாளர்கள் தங்களுடைய உடமைகளுடன் வெளியேறுவதை காணக் கூடியதாக உள்ளது

செம்பியன்பற்றில் இருந்து வெளியேறும் கரைவலை தொழிலாளர்கள் யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் அமைந்திருந்த கரைவலை வாடிகளை அகற்றும் பணி இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டதுகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் செம்பியன்பற்று சென் பிலிப்நேரிஸ் கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய சங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உழவியந்திரம் கொண்டு கரவலை தொழில் செய்வது  முற்றாக  தடை செய்யப்பட்டதுஇதனை மீறி பல மாதங்களாக அப்பகுதியில் உழவு இயந்திரம் கொண்டு  தொழில்புரிந்து வந்த கரைவலை தொழிலாளர்களை அகற்றும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டதுபொலிஸார் மற்றும் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளின் உத்தரவுக்கமைய  குறித்த பகுதிகளில் பணிபுரிந்த கரைவலை தொழிலாளர்கள் தங்களுடைய உடமைகளுடன் வெளியேறுவதை காணக் கூடியதாக உள்ளது

Advertisement

Advertisement

Advertisement