• Apr 13 2025

மன்னாரில் திடீரென பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு - பிரதமர் ஹரிணிக்கு அமோக வரவேற்பு

Thansita / Apr 12th 2025, 8:17 pm
image

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்றைய தினம்(12) மதியம் மன்னாருக்கு விஜயம் செய்தார்.

இதன்போது, நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

தேசிய மக்கள் சக்தியின் நானாட்டான் பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரித்து இன்றைய தினம்(12) மதியம் நானாட்டான் பிரதான மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் இடம்பெற்றது.

இதன் போது தேசிய மக்கள் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மா.ஜெகதீஸ்வரன்,செ.திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து உரை நிகழ்த்தினர்.

இதன்போது பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை, பிரதமரின் நானாட்டான் பகுதிக்கான விஜயத்தையொட்டி நானாட்டான் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் திடீரென பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு - பிரதமர் ஹரிணிக்கு அமோக வரவேற்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்றைய தினம்(12) மதியம் மன்னாருக்கு விஜயம் செய்தார்.இதன்போது, நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.தேசிய மக்கள் சக்தியின் நானாட்டான் பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரித்து இன்றைய தினம்(12) மதியம் நானாட்டான் பிரதான மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் இடம்பெற்றது.இதன் போது தேசிய மக்கள் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மா.ஜெகதீஸ்வரன்,செ.திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து உரை நிகழ்த்தினர்.இதன்போது பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.அதேவேளை, பிரதமரின் நானாட்டான் பகுதிக்கான விஜயத்தையொட்டி நானாட்டான் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement