இலங்கையின் 77வது சுதந்திர தினத்திற்கான ஏற்பாட்டுக் குழுவுடன் பிரதமர் ஹரிணி அமரசூரியகலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ம் திகதி இலங்கையின் 77 வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் கொண்டாடப்படவுள்ள முதலாவது சுதந்திர தினம் என்பதன் காரணமாக, இந்த வருட சுதந்திர தினத்தை கோலாகலமாகவும், வித்தியாசமாகவும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்காக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைமையில் அமைச்சர்களான அனில் ஜயந்த பெர்னாண்டோ, குமார ஜயகொடி, பிரதமரின் செயலாளர் சபுதந்திரி, பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சீப் எயார் மார்ஷல் சம்பத் துய்யகொன்ன, நாலக களுவெவ உள்ளிட்டவர்களைக் கொண்ட குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் சுதந்திர தினக் கொண்டாட்டம் தொடர்பாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சுதந்திர ஏற்பாட்டுக் குழுவினருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் போது சுதந்திரதின கொண்டாட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், உள்ளடக்கப்படவுள்ள கலாசார அம்சங்கள், ஏனைய ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
77வது சுதந்திர தின விழா – பாதுகாப்பு, கலாசார அம்சங்கள் குறித்து பிரதமர் கலந்துரையாடல் இலங்கையின் 77வது சுதந்திர தினத்திற்கான ஏற்பாட்டுக் குழுவுடன் பிரதமர் ஹரிணி அமரசூரியகலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ம் திகதி இலங்கையின் 77 வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது.தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் கொண்டாடப்படவுள்ள முதலாவது சுதந்திர தினம் என்பதன் காரணமாக, இந்த வருட சுதந்திர தினத்தை கோலாகலமாகவும், வித்தியாசமாகவும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதற்காக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைமையில் அமைச்சர்களான அனில் ஜயந்த பெர்னாண்டோ, குமார ஜயகொடி, பிரதமரின் செயலாளர் சபுதந்திரி, பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சீப் எயார் மார்ஷல் சம்பத் துய்யகொன்ன, நாலக களுவெவ உள்ளிட்டவர்களைக் கொண்ட குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் எதிர்வரும் சுதந்திர தினக் கொண்டாட்டம் தொடர்பாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சுதந்திர ஏற்பாட்டுக் குழுவினருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இதன் போது சுதந்திரதின கொண்டாட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், உள்ளடக்கப்படவுள்ள கலாசார அம்சங்கள், ஏனைய ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.