• Apr 28 2024

ரூ.22 கோடிக்கு ஏலம் போன இளவரசி டயானாவின் ஆடை!

Chithra / Jan 29th 2023, 7:46 am
image

Advertisement

பிரித்தானிய இளவரசி டயானாவின் கவுன் நியூயார்க்கில் ரூ.22 கோடிக்கு ஏலம் போனது.

இளவரசி டயானாவின் மிகவும் பிரபலமான ஊதா நிற வெல்வெட் கவுன் வெள்ளியன்று நடந்த ஏலத்தில் 600,000 அமெரிக்க டொலருக்கு (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.22 கோடி) விற்கப்பட்டது.


இந்த ஆடையானது முன்மதிப்பீட்டை விட 5 மடங்குக்கும் அதிகமான விலையைப் பெற்றது. இதன்முலம் இது பிரித்தானிய அரச குடும்பத்தின் விலையுயர்ந்த கவுனாக மாறியது.

இந்த ஏலத்தை நியூயார்க்கில் உள்ள சோத்பிஸ் நிறுவனம் ஏற்பாடு செய்தது. ஏல நிறுவனத்தின் இணையதளத்தில், இந்த கவுன் மதிப்பிடப்பட்ட விலை 80,000 முதல் 120,000 அமெரிக்க டொலர்களாகும்.

வெள்ளியன்று நடந்த ஏலத்தில் நான்கு ஏலதாரர்கள் இந்த கவுனுக்காக போட்டியிட்டனர், பின்னர் அது கட்டணம் உட்பட 604,800 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டது.


மறைந்த வேல்ஸ் இளவரசியான டயானா 1991-ல் அதிகாரப்பூர்வ அரச உருவப்படத்திலும், 1997-ல் ஒரு வேனிட்டி ஃபேர் போட்டோஷூட்டின்போதும் இந்த கவுனை அணிந்திருந்தார்.

இளவரசி டயானாவின் இந்த ஆடையை 1989-ஆம் ஆண்டு இலையுதிர்கால சேகரிப்பின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் வடிவமைப்பாளர் விக்டர் எடெல்ஸ்டீன் வடிவமைத்தார்.


விக்டர் எடெல்ஸ்டீன் இளவரசி டயானாவின் நீண்டகால ஆடை வடிவமைப்பாளராக இருந்தார், அவர் 1982 முதல் 1993 வரை அவருக்காக ஆடைகளை உருவாக்கினார்.

இந்த ஊதா நிற ஆடை முதன்முதலில் 1997-ல் 24,150 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. அந்த ஆண்டு இளவரசி ஏலம் விட முடிவு செய்த 79 காக்டெய்ல் மற்றும் மாலை ஆடைகளில் இதுவும் ஒன்று.  


ரூ.22 கோடிக்கு ஏலம் போன இளவரசி டயானாவின் ஆடை பிரித்தானிய இளவரசி டயானாவின் கவுன் நியூயார்க்கில் ரூ.22 கோடிக்கு ஏலம் போனது.இளவரசி டயானாவின் மிகவும் பிரபலமான ஊதா நிற வெல்வெட் கவுன் வெள்ளியன்று நடந்த ஏலத்தில் 600,000 அமெரிக்க டொலருக்கு (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.22 கோடி) விற்கப்பட்டது.இந்த ஆடையானது முன்மதிப்பீட்டை விட 5 மடங்குக்கும் அதிகமான விலையைப் பெற்றது. இதன்முலம் இது பிரித்தானிய அரச குடும்பத்தின் விலையுயர்ந்த கவுனாக மாறியது.இந்த ஏலத்தை நியூயார்க்கில் உள்ள சோத்பிஸ் நிறுவனம் ஏற்பாடு செய்தது. ஏல நிறுவனத்தின் இணையதளத்தில், இந்த கவுன் மதிப்பிடப்பட்ட விலை 80,000 முதல் 120,000 அமெரிக்க டொலர்களாகும்.வெள்ளியன்று நடந்த ஏலத்தில் நான்கு ஏலதாரர்கள் இந்த கவுனுக்காக போட்டியிட்டனர், பின்னர் அது கட்டணம் உட்பட 604,800 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டது.மறைந்த வேல்ஸ் இளவரசியான டயானா 1991-ல் அதிகாரப்பூர்வ அரச உருவப்படத்திலும், 1997-ல் ஒரு வேனிட்டி ஃபேர் போட்டோஷூட்டின்போதும் இந்த கவுனை அணிந்திருந்தார்.இளவரசி டயானாவின் இந்த ஆடையை 1989-ஆம் ஆண்டு இலையுதிர்கால சேகரிப்பின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் வடிவமைப்பாளர் விக்டர் எடெல்ஸ்டீன் வடிவமைத்தார்.விக்டர் எடெல்ஸ்டீன் இளவரசி டயானாவின் நீண்டகால ஆடை வடிவமைப்பாளராக இருந்தார், அவர் 1982 முதல் 1993 வரை அவருக்காக ஆடைகளை உருவாக்கினார்.இந்த ஊதா நிற ஆடை முதன்முதலில் 1997-ல் 24,150 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. அந்த ஆண்டு இளவரசி ஏலம் விட முடிவு செய்த 79 காக்டெய்ல் மற்றும் மாலை ஆடைகளில் இதுவும் ஒன்று.  

Advertisement

Advertisement

Advertisement