• May 09 2024

அதிபர், ஆசிரியர் மீது கடும் தாக்குதல்..! - மூடப்பட்டது பாடசாலை samugammedia

Chithra / Jun 21st 2023, 7:48 am
image

Advertisement

பாடசாலையொன்றின் அதிபர் மற்றும் ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்தை கண்டித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பலாங்கொட தேவானந்த விதியாலயத்தின் பூப்பந்தாட்டப் போட்டிக்குப் பொறுப்பான ஆசிரியர் டெர்வின் பிரியங்கர நேற்று (20) காலை வத்துகெதர பதிவத்த பிரதேசத்தில் வைத்து கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறே நேற்று முன்தினம் (19) காலை தேவானந்தா அதிபர் ஜானக பெதுருஹேவா பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து அதிபரின் அறைப் பொருட்களை சேதப்படுத்தி தாக்கியதில் காயமடைந்து பலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்குள்ளான தேவானந்தா பாடசாலையின் அதிபர் ஜானக பெதுருஹேவா மற்றும் பூப்பந்துக்கு பொறுப்பான கலாநிதி டெர்வின் பிரியங்கர ஆகியோர் தற்போது பலப்பிட்டி அடிப்படை வைத்தியசாலையின் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

அதிபர் மற்றும் விளையாட்டு ஆசிரியர் மீதான தாக்குதலை கண்டித்து நேற்று (20) தேவானந்தா வித்தியாலயத்தின் அனைத்து ஆசிரியர்களும் சுகயீன விடுமுறையில் சென்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

தேவானந்தா வித்தியாலயத்தின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு பெற்றோர்களும் நேற்று (20) பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்த்துள்ளதுடன், ஆசிரியர்கள் பாடசாலைக்கு வராததால் வந்த பெருமளவான பிள்ளைகள் வீடு திரும்பினர்.

அதிபரை தாக்கிய சந்தேகத்தின் பேரில் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விளையாட்டு ஆசிரியரை தாக்கியவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் மீதான தாக்குதலுக்கு பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்த மாணவனை தாக்கியமை தொடர்பில் எழுந்த பிரச்சினையே காரணமென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


அதிபர், ஆசிரியர் மீது கடும் தாக்குதல். - மூடப்பட்டது பாடசாலை samugammedia பாடசாலையொன்றின் அதிபர் மற்றும் ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்தை கண்டித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அம்பலாங்கொட தேவானந்த விதியாலயத்தின் பூப்பந்தாட்டப் போட்டிக்குப் பொறுப்பான ஆசிரியர் டெர்வின் பிரியங்கர நேற்று (20) காலை வத்துகெதர பதிவத்த பிரதேசத்தில் வைத்து கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.அவ்வாறே நேற்று முன்தினம் (19) காலை தேவானந்தா அதிபர் ஜானக பெதுருஹேவா பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து அதிபரின் அறைப் பொருட்களை சேதப்படுத்தி தாக்கியதில் காயமடைந்து பலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.தாக்குதலுக்குள்ளான தேவானந்தா பாடசாலையின் அதிபர் ஜானக பெதுருஹேவா மற்றும் பூப்பந்துக்கு பொறுப்பான கலாநிதி டெர்வின் பிரியங்கர ஆகியோர் தற்போது பலப்பிட்டி அடிப்படை வைத்தியசாலையின் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.அதிபர் மற்றும் விளையாட்டு ஆசிரியர் மீதான தாக்குதலை கண்டித்து நேற்று (20) தேவானந்தா வித்தியாலயத்தின் அனைத்து ஆசிரியர்களும் சுகயீன விடுமுறையில் சென்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.தேவானந்தா வித்தியாலயத்தின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு பெற்றோர்களும் நேற்று (20) பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்த்துள்ளதுடன், ஆசிரியர்கள் பாடசாலைக்கு வராததால் வந்த பெருமளவான பிள்ளைகள் வீடு திரும்பினர்.அதிபரை தாக்கிய சந்தேகத்தின் பேரில் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.விளையாட்டு ஆசிரியரை தாக்கியவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் மீதான தாக்குதலுக்கு பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்த மாணவனை தாக்கியமை தொடர்பில் எழுந்த பிரச்சினையே காரணமென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement