• Sep 21 2024

மட்டக்களப்பு போதன வைத்தியசாலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவதனை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

Tamil nila / Sep 2nd 2024, 7:52 pm
image

Advertisement

மட்டக்களப்பு போதன வைத்தியசாலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவதனை கண்டித்து வைத்தியசாலை தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் போதனா வைத்தியசாலையின் நிர்வாக பணிமனை முன்பாக நடைபெற்றது.


இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டதுடன் சுமார் அரை மணி நேரம் தங்களது எதிர்ப்பினை பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் முன்னெடுத்தனர்.



வைத்தியசாலை நிர்வாகம் தாதியர் உரிமையை பாதுகாக்க வேண்டும், வியாபார நோக்கில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும், வதந்திகளை நம்பாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

கடந்த 31ம் வைத்தியசாலையில் நோயாளிகள் உள்ள விடுதி ஒன்றில் இடம் பெற்ற அசம்பாவிதம் தொடர்பாக அதில் பாதிக்கப்பட்டதாக ஒரு நபர் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட செய்திக்கு எதிராகவே இந்த எதிர்ப்பில் ஈடுபட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.




மட்டக்களப்பு போதன வைத்தியசாலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு போதன வைத்தியசாலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவதனை கண்டித்து வைத்தியசாலை தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் போதனா வைத்தியசாலையின் நிர்வாக பணிமனை முன்பாக நடைபெற்றது.இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டதுடன் சுமார் அரை மணி நேரம் தங்களது எதிர்ப்பினை பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் முன்னெடுத்தனர்.வைத்தியசாலை நிர்வாகம் தாதியர் உரிமையை பாதுகாக்க வேண்டும், வியாபார நோக்கில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும், வதந்திகளை நம்பாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பில் ஈடுபட்டனர்.கடந்த 31ம் வைத்தியசாலையில் நோயாளிகள் உள்ள விடுதி ஒன்றில் இடம் பெற்ற அசம்பாவிதம் தொடர்பாக அதில் பாதிக்கப்பட்டதாக ஒரு நபர் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட செய்திக்கு எதிராகவே இந்த எதிர்ப்பில் ஈடுபட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement