• May 18 2024

நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Chithra / Jan 24th 2024, 9:04 am
image

Advertisement

 

நாடாளுமன்ற வீதியில் இன்று (புதன்கிழமை)  நடத்த திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகளை தடுக்க பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பொல்துவ சுற்றுவட்டத்திலிருந்து நாடாளுமன்ற வீதியை மறித்து, நாடாளுமன்றத்திற்கு செல்வதை தடுக்கும் வகையில்  போராட்டம் நடத்தவுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, எந்தவொரு வீதியையும் மறித்து, பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடாமலும், நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறாத வகையிலும், எந்தவொரு நபரும் போராட்டத்தை நடத்த முடியும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை மீறினால், அமைதியை நிலைநாட்ட பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.


நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு  நாடாளுமன்ற வீதியில் இன்று (புதன்கிழமை)  நடத்த திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகளை தடுக்க பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.குறித்த ஆர்ப்பாட்டம் சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி பொல்துவ சுற்றுவட்டத்திலிருந்து நாடாளுமன்ற வீதியை மறித்து, நாடாளுமன்றத்திற்கு செல்வதை தடுக்கும் வகையில்  போராட்டம் நடத்தவுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.இதன்படி, எந்தவொரு வீதியையும் மறித்து, பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடாமலும், நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறாத வகையிலும், எந்தவொரு நபரும் போராட்டத்தை நடத்த முடியும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.இந்த உத்தரவை மீறினால், அமைதியை நிலைநாட்ட பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement