அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே? மனிதம் பாதுகாக்கப்படுகிறதா? அரசே காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே? காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நிரந்தர தீர்வை பெற்று தருவீர்களா? ஆகிய பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதிபன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி அம்பாறையில் போராட்டம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.இதன்போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே மனிதம் பாதுகாக்கப்படுகிறதா அரசே காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நிரந்தர தீர்வை பெற்று தருவீர்களா ஆகிய பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதிபன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.