• Sep 17 2024

கொழும்பை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார், இராணுவத்தினர்

Chithra / Jan 16th 2023, 3:29 pm
image

Advertisement

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலய முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கொள்ளுப்பிட்டி நோக்க ஆர்ப்பாட்ட பேரணியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் திரண்டுள்ளனர்.

எதிர்ப்பு கோசங்களை எழுப்பிய வண்ணம் அவர்கள் அங்கு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

இந்த போராட்டம் கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் அங்கு பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து இரகசியமாக போராட்ட இடத்தை மாற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலய பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

வசந்த முதலிகேவை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும், மக்கள் வாழக்கூடிய சுமூகமான நிலையை ஏற்படுத்த கோரியும் இந்த ஆர்ப்படம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 


கொழும்பை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார், இராணுவத்தினர் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலய முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கொள்ளுப்பிட்டி நோக்க ஆர்ப்பாட்ட பேரணியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் திரண்டுள்ளனர்.எதிர்ப்பு கோசங்களை எழுப்பிய வண்ணம் அவர்கள் அங்கு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்இந்த போராட்டம் கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் அங்கு பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.இதனையடுத்து இரகசியமாக போராட்ட இடத்தை மாற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலய பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வசந்த முதலிகேவை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும், மக்கள் வாழக்கூடிய சுமூகமான நிலையை ஏற்படுத்த கோரியும் இந்த ஆர்ப்படம் மேற்கொள்ளப்படவுள்ளது.இந்த நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 

Advertisement

Advertisement

Advertisement