ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் பகிரங்க காணொளி கலந்துரையாடலுக்கு தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை மாற்றுவது தொடர்பில் இந்த கலந்துரையாடல் அடிப்படையாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இவ்விரு தலைவர்களும் தமது பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகள் தொடர்பில் பொதுவெளியில் தமது வாதங்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும், அதன் பின்னர் முழு நாடும் காணக்கூடிய வகையில் கலந்துரையாடல் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஐ.எம்.எவ் உடன்படிக்கை தொடர்பில் பகிரங்க கலந்துரையாடல்- எதிர்க் கட்சிகளுக்கு ரணில் பகிரங்க அழைப்பு. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் பகிரங்க காணொளி கலந்துரையாடலுக்கு தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை மாற்றுவது தொடர்பில் இந்த கலந்துரையாடல் அடிப்படையாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.இவ்விரு தலைவர்களும் தமது பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகள் தொடர்பில் பொதுவெளியில் தமது வாதங்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும், அதன் பின்னர் முழு நாடும் காணக்கூடிய வகையில் கலந்துரையாடல் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.