• May 02 2024

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு; பலத்த பாதுகாப்புடன் வெளியில் வந்த பிரதான குற்றவாளி! SamugamMedia

Chithra / Mar 20th 2023, 5:52 pm
image

Advertisement

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் மரண தண்டனை வித்தக்கப்பட்ட சுவீஸ் குமார் இன்று நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகள் அழைத்து வந்திருந்தனர்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு எதிரானது என்றும், குற்றச்சாட்டில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.


இந்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றிருந்தது.

பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான திகதியை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. 


பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுக்களை ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீடுகள் கோரப்பட்ட நிலையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வழக்கில் முக்கிய குற்றவாளியான 'ஸ்வீஸ் குமார்' பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். 


கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வித்தியா என்ற பாடசாலை சிறுமி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்நிலையில் இடம்பெற்றிருந்தது.

இதில் பிரதிவாதிகள் ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு எதிரானது என்றும், குற்றச்சாட்டில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு; பலத்த பாதுகாப்புடன் வெளியில் வந்த பிரதான குற்றவாளி SamugamMedia புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் மரண தண்டனை வித்தக்கப்பட்ட சுவீஸ் குமார் இன்று நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகள் அழைத்து வந்திருந்தனர்.மரணதண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு எதிரானது என்றும், குற்றச்சாட்டில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றிருந்தது.பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான திகதியை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுக்களை ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த மேல்முறையீடுகள் கோரப்பட்ட நிலையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வழக்கில் முக்கிய குற்றவாளியான 'ஸ்வீஸ் குமார்' பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வித்தியா என்ற பாடசாலை சிறுமி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்நிலையில் இடம்பெற்றிருந்தது.இதில் பிரதிவாதிகள் ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு எதிரானது என்றும், குற்றச்சாட்டில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement