• Sep 17 2024

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது தரமான மீன்களே - டக்ளஸ் பகிரங்கம்...!samugammedia

Anaath / Nov 14th 2023, 1:01 pm
image

Advertisement

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள கொப்பறா மற்றும்   தலப்பத் ஆகிய மீன்கள் இளநகையில் அறுபடை செய்வது மிகக்குறைவு அந்த வகையில் தான் இந்த இரண்டும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

குறித்த  விடயம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

 கடல்தொழிலை பொறுத்தவரையில் எங்களுடைய நாட்டில் அறுவடை செய்யாத கடல் உணவுகள் அல்லது குறைந்த அளவில் அறுவடை செய்யக்கூடிய உணவுகளைத்தான்  அவர்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்றார்கள். குறிப்பாக இலங்கையில் ஆஸ்பத்திரிகள்  ,படைத்தரப்பினர்  அதைவிட சிறை நிர்வாகம் இவ்வாறான இடங்களுக்கு ஒரு சட்டப்பிரமணம் ஒரு குறிப்பிட்டளவு தான் குடுக்க முடியும் என்றதனால் இவ்வாறான மீன்களை இறக்குமதி செய்தால் தான் அதை சுத்தப்படுத்துவதற்கும்,பங்கு போடுவதற்கும் இலகுவாக இருக்கும்  என்ற வகையில் அவர்கள் இறக்குமதி செய்திருக்கின்றார்கள் . ஆனால் நாங்கள் இது தொடர்பாக சம்பத்தப்பட்ட திணைக்கழகங்களுடன் கலந்துரையாடிக்கொண்டு இருக்கின்றோம்.உள்நாட்டில் அறுவடை செய்யப்படுகின்ற இந்த கடல் உணவுகளை எவ்வாறு பங்கிடலாம் என்ற ஒரு கலந்துரையாடல் போய்க்கொண்டு இருக்கின்றது.

 சமீபத்தில் இரண்டு தரமான மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டன .ஒன்று கொப்பறா மற்றது தலப்பத்   . இந்த இரண்டும் இந்த நாட்டில்  அறுவடை செய்வதும் மிகக் குறைவு.அந்த வகையில் தான் இந்த இரண்டும் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் நான் ஏற்கனவே சொன்னது போல உள்ளூரில் அறுவடை செய்யக்கூடிய மீன்களை எவ்வாறு இந்த அரச நிறுவனங்களுக்கு பங்கிட்டு கொடுக்கலாம் என்றதில் கூடிய அக்கறை செலுத்துகின்றோம் . என அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது தரமான மீன்களே - டக்ளஸ் பகிரங்கம்.samugammedia இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள கொப்பறா மற்றும்   தலப்பத் ஆகிய மீன்கள் இளநகையில் அறுபடை செய்வது மிகக்குறைவு அந்த வகையில் தான் இந்த இரண்டும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குறித்த  விடயம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  கடல்தொழிலை பொறுத்தவரையில் எங்களுடைய நாட்டில் அறுவடை செய்யாத கடல் உணவுகள் அல்லது குறைந்த அளவில் அறுவடை செய்யக்கூடிய உணவுகளைத்தான்  அவர்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்றார்கள். குறிப்பாக இலங்கையில் ஆஸ்பத்திரிகள்  ,படைத்தரப்பினர்  அதைவிட சிறை நிர்வாகம் இவ்வாறான இடங்களுக்கு ஒரு சட்டப்பிரமணம் ஒரு குறிப்பிட்டளவு தான் குடுக்க முடியும் என்றதனால் இவ்வாறான மீன்களை இறக்குமதி செய்தால் தான் அதை சுத்தப்படுத்துவதற்கும்,பங்கு போடுவதற்கும் இலகுவாக இருக்கும்  என்ற வகையில் அவர்கள் இறக்குமதி செய்திருக்கின்றார்கள் . ஆனால் நாங்கள் இது தொடர்பாக சம்பத்தப்பட்ட திணைக்கழகங்களுடன் கலந்துரையாடிக்கொண்டு இருக்கின்றோம்.உள்நாட்டில் அறுவடை செய்யப்படுகின்ற இந்த கடல் உணவுகளை எவ்வாறு பங்கிடலாம் என்ற ஒரு கலந்துரையாடல் போய்க்கொண்டு இருக்கின்றது. சமீபத்தில் இரண்டு தரமான மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டன .ஒன்று கொப்பறா மற்றது தலப்பத்   . இந்த இரண்டும் இந்த நாட்டில்  அறுவடை செய்வதும் மிகக் குறைவு.அந்த வகையில் தான் இந்த இரண்டும் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் நான் ஏற்கனவே சொன்னது போல உள்ளூரில் அறுவடை செய்யக்கூடிய மீன்களை எவ்வாறு இந்த அரச நிறுவனங்களுக்கு பங்கிட்டு கொடுக்கலாம் என்றதில் கூடிய அக்கறை செலுத்துகின்றோம் . என அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement