• Apr 23 2025

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சுற்றிவளைப்பு: இருவர் கைது..!

Sharmi / Apr 23rd 2025, 8:26 am
image

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமாக ஒளிப்பாச்சி மீன்பிடித்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்றையதினம்(22)  இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி கிழக்கு கடற் பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்றையதினம் காலை கட்டைக்காட்டு கடற்பரப்பில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிப்பாச்சி மீன் பிடித்த  இருவர் இரண்டு படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சுற்றிவளைப்பு: இருவர் கைது. யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமாக ஒளிப்பாச்சி மீன்பிடித்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் நேற்றையதினம்(22)  இடம்பெற்றுள்ளது.வடமராட்சி கிழக்கு கடற் பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்றையதினம் காலை கட்டைக்காட்டு கடற்பரப்பில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிப்பாச்சி மீன் பிடித்த  இருவர் இரண்டு படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement