• Sep 17 2024

மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்பு!

Tamil nila / Jun 3rd 2024, 10:33 pm
image

Advertisement

பதுளை நோக்கி சென்ற புகையிரதம் ஒன்று தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இச் சம்பவம் பதுளை -  கொழும்பு பிரதான மார்க்கத்தில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு சமீபமாக உள்ள சிங்கமலை சுரங்க வழி பாதை ஆரம்ப இடத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து இன்று காலை 9.45 மணியளவில் பதுளை நோக்கி புறப்பட்ட புகையிதமே இவ்வாறு தடம் புரள்வுக்கு உட்பட்டுள்ளது.

குறித்த புகையிரதத்தின் கடைசி பெட்டியான  காட்சி கூட பெட்டி தடம் புரள்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் புகையிரத பயணிகள் எவருக்கு காயங்கள் எதுவும்  ஏற்படவில்லை எனவும், புகையிரத பாதை மாத்திரம் சேதமடைந்துள்ளதாகவும், குறித்த பெட்டியினை கழற்றிவிட்டு புகையிரதம் கொட்டகலை புகையிரத நிலையத்தின் சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, பதுளையிலிருந்து வரும் புகையிரதங்கள் கொட்டகலை வரையும் கொழும்பிலிருந்து வரும் புகையிரதங்கள் ஹட்டன் புகையிரத நிலையங்கள் வரை சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சேதமடைந்து புகையிரத வீதியினை சீர் செய்த பின் வழமை போல் புகையிரத சேவைகள் இடம்பெறும் என புகையிரத நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

புகையிரதங்களில் வருகை தந்த பயணிகளின் அசௌகரிங்களை குறைப்பதற்காக பேருந்துகள் மூலம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்பு பதுளை நோக்கி சென்ற புகையிரதம் ஒன்று தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.இச் சம்பவம் பதுளை -  கொழும்பு பிரதான மார்க்கத்தில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு சமீபமாக உள்ள சிங்கமலை சுரங்க வழி பாதை ஆரம்ப இடத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கொழும்பிலிருந்து இன்று காலை 9.45 மணியளவில் பதுளை நோக்கி புறப்பட்ட புகையிதமே இவ்வாறு தடம் புரள்வுக்கு உட்பட்டுள்ளது.குறித்த புகையிரதத்தின் கடைசி பெட்டியான  காட்சி கூட பெட்டி தடம் புரள்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் புகையிரத பயணிகள் எவருக்கு காயங்கள் எதுவும்  ஏற்படவில்லை எனவும், புகையிரத பாதை மாத்திரம் சேதமடைந்துள்ளதாகவும், குறித்த பெட்டியினை கழற்றிவிட்டு புகையிரதம் கொட்டகலை புகையிரத நிலையத்தின் சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதற்கமைய, பதுளையிலிருந்து வரும் புகையிரதங்கள் கொட்டகலை வரையும் கொழும்பிலிருந்து வரும் புகையிரதங்கள் ஹட்டன் புகையிரத நிலையங்கள் வரை சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சேதமடைந்து புகையிரத வீதியினை சீர் செய்த பின் வழமை போல் புகையிரத சேவைகள் இடம்பெறும் என புகையிரத நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார்.புகையிரதங்களில் வருகை தந்த பயணிகளின் அசௌகரிங்களை குறைப்பதற்காக பேருந்துகள் மூலம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement