ராஜபக்சக்களை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கோரி பொது மக்களின் கையொப்பங்களை சேகரிக்கும் நிகழ்வொன்று கொழும்பு, புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் என்ற அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்றிருந்தது.
இலங்கை பொருளாதார ரீதியில் நெருக்கடிக்கு முகம்கொடுக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரே இலங்கை பொருளாதார ரீதியில் பின்னடைய காரணமானவர்கள் என வலியுறுத்தி குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுசீரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மறுசீரமைப்பின் கீழ் புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட உள்ளது இது டிசம்பர் 15ஆம் திகதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போதுள்ள கட்சி அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், கட்சியின் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
கட்சியின் தலைமை, செயலாளர் பதவி மற்றும் தேசிய அமைப்பாளர் பதவிகளுக்கும் புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.
ராஜபக்சக்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் - கொழும்பில் கையெழுத்து சேகரிப்பு. samugammedia ராஜபக்சக்களை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கோரி பொது மக்களின் கையொப்பங்களை சேகரிக்கும் நிகழ்வொன்று கொழும்பு, புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.குறித்த நிகழ்வானது மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் என்ற அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்றிருந்தது.இலங்கை பொருளாதார ரீதியில் நெருக்கடிக்கு முகம்கொடுக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரே இலங்கை பொருளாதார ரீதியில் பின்னடைய காரணமானவர்கள் என வலியுறுத்தி குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுசீரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மறுசீரமைப்பின் கீழ் புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட உள்ளது இது டிசம்பர் 15ஆம் திகதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி தற்போதுள்ள கட்சி அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், கட்சியின் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.கட்சியின் தலைமை, செயலாளர் பதவி மற்றும் தேசிய அமைப்பாளர் பதவிகளுக்கும் புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.