• Sep 08 2024

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் - ஒருவர் படுகாயம்! samugammedia

Tamil nila / Sep 26th 2023, 10:39 pm
image

Advertisement

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை (25) மாலை  மீன் பிடிப்பதற்கு அனுமதி சீட்டு பெற்று சுமார் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்  கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகு மீது கற்கள் கொண்டு தாக்கியதில் அதில் இருந்த பிராங்கிளின்  என்ற மீனவர் கற்கள் பட்டதில் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து சக மீனவர்கள் அவரை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை பெற்று பின்னர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து படுகாயம் அடைந்த மீனவர்களிடம் மத்திய, மாநில உளவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் - ஒருவர் படுகாயம் samugammedia ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை (25) மாலை  மீன் பிடிப்பதற்கு அனுமதி சீட்டு பெற்று சுமார் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்  கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகு மீது கற்கள் கொண்டு தாக்கியதில் அதில் இருந்த பிராங்கிளின்  என்ற மீனவர் கற்கள் பட்டதில் படுகாயம் அடைந்தார்.இதையடுத்து சக மீனவர்கள் அவரை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை பெற்று பின்னர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.இதையடுத்து படுகாயம் அடைந்த மீனவர்களிடம் மத்திய, மாநில உளவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement