• Feb 05 2025

இரண்டு முக்கிய உடன்பாட்டை எட்டுவது தொடர்பில் ரணில் - சஜித் தரப்பு கவனம்

Chithra / Feb 5th 2025, 8:19 am
image

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான இரண்டு முக்கிய வழிமுறைகள் குறித்து உடன்பாட்டை எட்டுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

சில உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாகப் போட்டியிடுவதற்கும், 

ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றும்போது ஒன்றிணைவது எனவும் இதன்போது யோசனை முன்மொழியப்பட்டதாகப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

இது தொடர்பில் இரு கட்சிகளினதும் தலைமைகள் தொடர்ந்தும் கலந்துரையாடவுள்ளதுடன், இந்த கலந்துரையாடலைத் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இரண்டு முக்கிய உடன்பாட்டை எட்டுவது தொடர்பில் ரணில் - சஜித் தரப்பு கவனம்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான இரண்டு முக்கிய வழிமுறைகள் குறித்து உடன்பாட்டை எட்டுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.சில உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாகப் போட்டியிடுவதற்கும், ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றும்போது ஒன்றிணைவது எனவும் இதன்போது யோசனை முன்மொழியப்பட்டதாகப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பில் இரு கட்சிகளினதும் தலைமைகள் தொடர்ந்தும் கலந்துரையாடவுள்ளதுடன், இந்த கலந்துரையாடலைத் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement