• Oct 31 2024

பிரதமராக ரணில் ஆட்சிப்பீடம் ஏறுவார்- அப்துல்லா மஹ்ரூப் ஆரூடம்..!

Sharmi / Oct 31st 2024, 2:26 pm
image

Advertisement

திருகோணமலை மாவட்டத்தில் இம் முறை சஜித் , ஹக்கீம், ரிசாட் போன்றோர்களுக்கு வாக்குகள் இல்லை என புதிய ஜனநாயக முன்னணியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இன்று (31) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் அடியும் உதையும் கொடுத்து வருகின்ற போது, மக்கள் மத்தியில் சிலிண்டருக்கு வாக்குகள் காணப்படுகிறது.

மூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற நாம் கிராமம் கிராமமாக வீடு வீடாக செல்கிறோம் .

இம் முறை தேர்தலின் பின் ரணில் விக்ரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணி  நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட ஆசனங்களை பெற்று அநுர குமார அரசாங்கத்துடன் பங்காளிக் கட்சியாக பிரதமராக ரணில் ஆட்சியமைப்பார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலை முன்வைத்து தேசிய மட்டத்தில் கருத்து கூற தெரியாதவர்கள் தங்களின் சுய இலாப அரசியலுக்காக அநுரவுடன் இணைந்து அமைச்சரவையில் ஆட்சியமைப்போம் என கூறுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.


பிரதமராக ரணில் ஆட்சிப்பீடம் ஏறுவார்- அப்துல்லா மஹ்ரூப் ஆரூடம். திருகோணமலை மாவட்டத்தில் இம் முறை சஜித் , ஹக்கீம், ரிசாட் போன்றோர்களுக்கு வாக்குகள் இல்லை என புதிய ஜனநாயக முன்னணியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.கிண்ணியாவில் இன்று (31) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் அடியும் உதையும் கொடுத்து வருகின்ற போது, மக்கள் மத்தியில் சிலிண்டருக்கு வாக்குகள் காணப்படுகிறது.சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற நாம் கிராமம் கிராமமாக வீடு வீடாக செல்கிறோம் .இம் முறை தேர்தலின் பின் ரணில் விக்ரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணி  நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட ஆசனங்களை பெற்று அநுர குமார அரசாங்கத்துடன் பங்காளிக் கட்சியாக பிரதமராக ரணில் ஆட்சியமைப்பார்.கடந்த ஜனாதிபதி தேர்தலை முன்வைத்து தேசிய மட்டத்தில் கருத்து கூற தெரியாதவர்கள் தங்களின் சுய இலாப அரசியலுக்காக அநுரவுடன் இணைந்து அமைச்சரவையில் ஆட்சியமைப்போம் என கூறுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement