• May 02 2024

Sharmi / Jan 21st 2023, 6:31 pm
image

Advertisement

கொழும்பு மாநகர சபைக்கான ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்புமனுக்கள் இன்று கையளிக்கப்பட்டதுடன் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள அணியில் மேயர் பதவிக்கான வேட்பாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என தெரியவருகிறது.

இதனடிப்படையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு தகுதியான நபரை கட்சி தீர்மானிக்கும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.

தேர்தலில் வேட்பாளர்கள் பெற்றுக்கொள்ளும் வாக்குகளின் எண்ணிக்கை உட்பட முழு தேர்தல் செயற்பாடுகளிலும் வேட்பாளர்களின் செயல்திறனுக்கு அமைய மிகவும் பொருத்தமான நபர மேயர் பதவிக்கு தெரிவு செய்யப்படுவார் எனவும் ஐக்கிய தேசியக்கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையிலேயே பலத்த போட்டி இருக்கும் கூறப்படுகிறது.

கொழும்பு மாநகர சபையானது ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்படும் மாநகர சபையாகும். அத்துடன் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அதிகளவில் தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரணிலின் கோட்டையில் மிஸ்ஸான மேயர் கொழும்பு மாநகர சபைக்கான ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்புமனுக்கள் இன்று கையளிக்கப்பட்டதுடன் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள அணியில் மேயர் பதவிக்கான வேட்பாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என தெரியவருகிறது.இதனடிப்படையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு தகுதியான நபரை கட்சி தீர்மானிக்கும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.தேர்தலில் வேட்பாளர்கள் பெற்றுக்கொள்ளும் வாக்குகளின் எண்ணிக்கை உட்பட முழு தேர்தல் செயற்பாடுகளிலும் வேட்பாளர்களின் செயல்திறனுக்கு அமைய மிகவும் பொருத்தமான நபர மேயர் பதவிக்கு தெரிவு செய்யப்படுவார் எனவும் ஐக்கிய தேசியக்கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையிலேயே பலத்த போட்டி இருக்கும் கூறப்படுகிறது.கொழும்பு மாநகர சபையானது ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்படும் மாநகர சபையாகும். அத்துடன் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அதிகளவில் தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement