• May 08 2024

ரணிலின் நகர்வு வெற்றி - இரண்டாக உடைந்தது கூட்டமைப்பு! - வெளியான அதிரடி அறிவிப்பு

Chithra / Jan 8th 2023, 3:10 pm
image

Advertisement

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் புதிதாக உள்வாங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தனிப்பட்ட ரீதியில் ஒரு கட்சியினால் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் எந்த விதத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருப்பிற்கு பிரச்சனையை ஏற்படுத்தாது என ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இருக்கின்ற ஒரு கட்சியினர் சில தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் அவ்வாறான தீர்மானங்களிலும் மாறுபட்ட நிலைப்பாடு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது பல கட்சிகளை உள்வாங்கி பயணித்து வந்த ஒரு அமைப்பு.

காலத்தின் கோலத்தினாலே பலர் அதிலிருந்து வெளியேறிய சூழல் காணப்படுகின்றது. இன்னும் பலரையும் நாங்கள் இணைக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.


ஆகவே இந்த முயற்சியைத் தொடர்ந்து மற்ற அங்கத்துவ கட்சிகளும், இப்பொழுது ஒருமித்த நிலைப்பாட்டிலே செயலாற்றி கொண்டிருப்பவர்களை, நாங்கள் சரியான முறையிலே ஒருங்கமைத்து ஒரு கட்டமைப்பாக பலப்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்.

தனிப்பட்ட ரீதியிலே கட்சிகளினுடைய கூட்டங்களிலே எடுக்கப்படுகின்ற முடிவுகள், ஒட்டு மொத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய அல்லது தமிழ் தரப்பினர் ஒருமைப்படுத்தபடவேண்டும் என்ற முயற்சிக்கு பங்கம் ஏற்படுத்தாது என்பது எங்களுடைய நிலைப்பாடு.

அதே போன்று தேர்தல்களிலே எப்படி முகம் கொடுப்பது என்பதை பற்றி ஒரு கட்சியினுடைய கூட்டத்திலே பேசப்பட்டதாக, நாங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். அதிலும் சில மாறுபட்ட கருத்துக்களையே நாங்கள் அறிகின்றோம்.

ஆகவே அது சரியான தீர்வு என்ன? என்பதை அங்கத்துவ கட்சிகளோடு கலந்துரையாடி முடிவுக்கு வருவதாக ஒரு கருத்து  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கூட்டம் நடைபெற்ற பின்னர் தான் இந்த தேர்தல்கள் எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதை எங்களுக்கு உறுதியாக சொல்ல முடியும்.- என்றார்.


ரணிலின் நகர்வு வெற்றி - இரண்டாக உடைந்தது கூட்டமைப்பு - வெளியான அதிரடி அறிவிப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் புதிதாக உள்வாங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தனிப்பட்ட ரீதியில் ஒரு கட்சியினால் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் எந்த விதத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருப்பிற்கு பிரச்சனையை ஏற்படுத்தாது என ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.இன்று யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இருக்கின்ற ஒரு கட்சியினர் சில தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் அவ்வாறான தீர்மானங்களிலும் மாறுபட்ட நிலைப்பாடு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது பல கட்சிகளை உள்வாங்கி பயணித்து வந்த ஒரு அமைப்பு.காலத்தின் கோலத்தினாலே பலர் அதிலிருந்து வெளியேறிய சூழல் காணப்படுகின்றது. இன்னும் பலரையும் நாங்கள் இணைக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.ஆகவே இந்த முயற்சியைத் தொடர்ந்து மற்ற அங்கத்துவ கட்சிகளும், இப்பொழுது ஒருமித்த நிலைப்பாட்டிலே செயலாற்றி கொண்டிருப்பவர்களை, நாங்கள் சரியான முறையிலே ஒருங்கமைத்து ஒரு கட்டமைப்பாக பலப்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்.தனிப்பட்ட ரீதியிலே கட்சிகளினுடைய கூட்டங்களிலே எடுக்கப்படுகின்ற முடிவுகள், ஒட்டு மொத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய அல்லது தமிழ் தரப்பினர் ஒருமைப்படுத்தபடவேண்டும் என்ற முயற்சிக்கு பங்கம் ஏற்படுத்தாது என்பது எங்களுடைய நிலைப்பாடு.அதே போன்று தேர்தல்களிலே எப்படி முகம் கொடுப்பது என்பதை பற்றி ஒரு கட்சியினுடைய கூட்டத்திலே பேசப்பட்டதாக, நாங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். அதிலும் சில மாறுபட்ட கருத்துக்களையே நாங்கள் அறிகின்றோம்.ஆகவே அது சரியான தீர்வு என்ன என்பதை அங்கத்துவ கட்சிகளோடு கலந்துரையாடி முடிவுக்கு வருவதாக ஒரு கருத்து  தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த கூட்டம் நடைபெற்ற பின்னர் தான் இந்த தேர்தல்கள் எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதை எங்களுக்கு உறுதியாக சொல்ல முடியும்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement