• May 19 2024

8 மாதங்களுக்கு முன் ரணில் வழங்கிய வாக்குறுதி – புதிய ஆளுநர் ஊடகங்களுக்கு தெரிவிப்பு.! samugammedia

Chithra / Jun 13th 2023, 4:05 pm
image

Advertisement

சப்ரகமுவ மாகாணத்தின் கல்வித்துறைக்கு பாரிய சேவையை ஆற்றவுள்ளதாகவும் அரசாங்கத்திடம் நிதி நெருக்கடி காணப்படுகின்ற நிலையில் தனியாரிடமிருந்து நிதியினை பெற்றாவது சிறந்த சேவையை வழங்கவுள்ளதாக சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநராக இன்று ஜனாதிபதி முன்நிலையில் பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 8 மாதங்களுக்கு முன்னர் எனக்கு பதவியை வழங்குவதாக உறுதியளித்தார். அது இன்று உண்மையாகிவிட்டது. 

இந்த ஆளுநர் பதவி என்பது, அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு நிகரான பதவி. மாகாண சபைகள் இயங்காத நிலையில்,  ஆளுநருக்கே அனைத்து அதிகாரங்களும் உண்டு. 

எனவே அந்த அதிகாரங்களை பயன்படுத்தி சப்ரகமுவ மாகாணத்திற்கு சிறந்த சேவையை செய்ய நான் நம்புகிறேன்.

நாங்கள் ஜனாதிபதியிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரு விடயம் என்னவென்றால், நாங்கள் சவால்களை எதிர்கொள்ளவேண்டும்.

அதாவது, நீங்கள் எங்காவது சென்று அந்த சவாலை ஏற்க வேண்டும். எனவே நான் இங்கு வருகிறேன். 

குறிப்பாக நிதி நெருக்கடியான நேரத்தில், அரசாங்கம் செலவினங்களைக் குறைக்கும் நேரத்தில் இந்த மாகாணத்திற்கு சிறந்த சேவையை செய்ய விரும்புகின்றேன்.

எனவே இதனை 18 மாதங்களில் என்னால் அதைச் செய்ய முடிந்தால், அது எனக்கு தனிப்பட்ட சாதனை என்று நினைக்கிறேன்.

8 மாதங்களுக்கு முன் ரணில் வழங்கிய வாக்குறுதி – புதிய ஆளுநர் ஊடகங்களுக்கு தெரிவிப்பு. samugammedia சப்ரகமுவ மாகாணத்தின் கல்வித்துறைக்கு பாரிய சேவையை ஆற்றவுள்ளதாகவும் அரசாங்கத்திடம் நிதி நெருக்கடி காணப்படுகின்ற நிலையில் தனியாரிடமிருந்து நிதியினை பெற்றாவது சிறந்த சேவையை வழங்கவுள்ளதாக சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.சப்ரகமுவ மாகாண ஆளுநராக இன்று ஜனாதிபதி முன்நிலையில் பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 8 மாதங்களுக்கு முன்னர் எனக்கு பதவியை வழங்குவதாக உறுதியளித்தார். அது இன்று உண்மையாகிவிட்டது. இந்த ஆளுநர் பதவி என்பது, அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு நிகரான பதவி. மாகாண சபைகள் இயங்காத நிலையில்,  ஆளுநருக்கே அனைத்து அதிகாரங்களும் உண்டு. எனவே அந்த அதிகாரங்களை பயன்படுத்தி சப்ரகமுவ மாகாணத்திற்கு சிறந்த சேவையை செய்ய நான் நம்புகிறேன்.நாங்கள் ஜனாதிபதியிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரு விடயம் என்னவென்றால், நாங்கள் சவால்களை எதிர்கொள்ளவேண்டும்.அதாவது, நீங்கள் எங்காவது சென்று அந்த சவாலை ஏற்க வேண்டும். எனவே நான் இங்கு வருகிறேன். குறிப்பாக நிதி நெருக்கடியான நேரத்தில், அரசாங்கம் செலவினங்களைக் குறைக்கும் நேரத்தில் இந்த மாகாணத்திற்கு சிறந்த சேவையை செய்ய விரும்புகின்றேன்.எனவே இதனை 18 மாதங்களில் என்னால் அதைச் செய்ய முடிந்தால், அது எனக்கு தனிப்பட்ட சாதனை என்று நினைக்கிறேன்.

Advertisement

Advertisement

Advertisement