• Jan 07 2025

இரத்தினபுரி மாவட்டம் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Tharmini / Dec 11th 2024, 11:47 am
image

2024 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்டம் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.

இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மற்றும் இரத்தினபுரி மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட நாடாளுமன்ற குழு தலைவருமான சாந்த பத்மகுமார தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது புத்தாசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிது  சுனில் செனவி , பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உட்பட இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச மற்றும் அரை அரச நிறுவனங்கள் சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அபிவிருத்தி குழு கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி சம்பந்தமான

பல்வேறு கருத்துக்கள முன்வைக்கப்பட்டன.

கடந்த கால அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாக ஒரு மீளாய்வு செய்யப்பட்டதுடன் எதிர்காலத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாக முழுமையாக கலந்துரையாடப்பட்டதுடன்.

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் இரத்தினபுரியிலுள்ள தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்தி ,மற்றும் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளை கொண்ட பாடசாலைகள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் அதன் பௌதீக வளங்கள், ஆசிரியர் பற்றாக்குறை சம்பந்தமாகவும் தற்போது மாவட்டத்தின் உள்ள தோட்டப்புறங்களில் தலைவிரித்தாடும் சட்டவிரோதமான மதுபானங்களை தடை செய்தல் , அவற்றை முழுமையாக இல்லாது ஒழித்தல் போன்ற விடயங்களை கூட்டத்தில் முன் வைத்திருந்தார். 

இறக்குவானை மதம்பை இல 2 பாடசாலை உயர் தரம் சார்ந்த சாதகமான முடிவு எடுக்கப்பட்டது.

மாவட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாந்த பத்தமகுமார கருத்து தெரிவிக்கையில்,

இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.





இரத்தினபுரி மாவட்டம் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 2024 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்டம் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மற்றும் இரத்தினபுரி மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட நாடாளுமன்ற குழு தலைவருமான சாந்த பத்மகுமார தலைமையில் இடம்பெற்றது. இதன்போது புத்தாசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிது  சுனில் செனவி , பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உட்பட இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச மற்றும் அரை அரச நிறுவனங்கள் சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அபிவிருத்தி குழு கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி சம்பந்தமானபல்வேறு கருத்துக்கள முன்வைக்கப்பட்டன.கடந்த கால அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாக ஒரு மீளாய்வு செய்யப்பட்டதுடன் எதிர்காலத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாக முழுமையாக கலந்துரையாடப்பட்டதுடன். பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் இரத்தினபுரியிலுள்ள தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்தி ,மற்றும் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளை கொண்ட பாடசாலைகள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் அதன் பௌதீக வளங்கள், ஆசிரியர் பற்றாக்குறை சம்பந்தமாகவும் தற்போது மாவட்டத்தின் உள்ள தோட்டப்புறங்களில் தலைவிரித்தாடும் சட்டவிரோதமான மதுபானங்களை தடை செய்தல் , அவற்றை முழுமையாக இல்லாது ஒழித்தல் போன்ற விடயங்களை கூட்டத்தில் முன் வைத்திருந்தார். இறக்குவானை மதம்பை இல 2 பாடசாலை உயர் தரம் சார்ந்த சாதகமான முடிவு எடுக்கப்பட்டது.மாவட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாந்த பத்தமகுமார கருத்து தெரிவிக்கையில்,இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement