• May 19 2024

தமிழீழத்திற்கு கிடைத்த அங்கீகாரம்; கனடாவில் ஏற்றப்பட்ட தமிழீழ கொடி! samugammedia

Tamil nila / Nov 22nd 2023, 8:19 pm
image

Advertisement

பிரம்டன் நகரசபை வளாகத்தில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்ட முதல்  நிகழ்வு பதிவாகியுள்ளது.

பிராம்டன் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன் நேற்று காலை 8.30 மணிக்கு தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்துள்ளார்.

இது தொடர்பில் பேட்ரிக் பிரவுன் தனது சமூக வலைத்தளத்தில்,

இன்று நாம் அனைவரும் தமிழீழத் தேசியக் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட 33 ஆம் ஆண்டு நிறைவை மரியாதை செலுத்தும் முகமாக பிரம்டன் நகர மண்டபத்தில் ஒன்று கூடினோம். இன்று மட்டுமல்ல ஒவ்வொரு நாளும், நாங்கள் கனடாவாழ் ஈழத்தமிழர்களின் எழுச்சியையும், பிரம்டன் மற்றும் கனடா முழுவதுமான எமது சமூகங்கள் அனைத்தையும் வளப்படுத்துவதில் அவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பையும் கொண்டாடுவோம். ஈழத்தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பையும் மனித உரிமை மீறல்களையும் தொடர்ந்துகொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பையும் ஒரு போதும் மறக்கமாட்டோம் என பதிவிட்டுள்ளார்.

மாவீரர்களினதும் மக்களினதும் தியாகத்தால் உருவாக்கப்பட்ட தமிழீழத் தேசியக்கொடியை உலகின் அங்கீகாரத்திற்கு எடுத்துச் செல்லும் முதற்படியாக இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழீழத்திற்கு கிடைத்த அங்கீகாரம்; கனடாவில் ஏற்றப்பட்ட தமிழீழ கொடி samugammedia பிரம்டன் நகரசபை வளாகத்தில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்ட முதல்  நிகழ்வு பதிவாகியுள்ளது.பிராம்டன் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன் நேற்று காலை 8.30 மணிக்கு தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்துள்ளார்.இது தொடர்பில் பேட்ரிக் பிரவுன் தனது சமூக வலைத்தளத்தில்,இன்று நாம் அனைவரும் தமிழீழத் தேசியக் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட 33 ஆம் ஆண்டு நிறைவை மரியாதை செலுத்தும் முகமாக பிரம்டன் நகர மண்டபத்தில் ஒன்று கூடினோம். இன்று மட்டுமல்ல ஒவ்வொரு நாளும், நாங்கள் கனடாவாழ் ஈழத்தமிழர்களின் எழுச்சியையும், பிரம்டன் மற்றும் கனடா முழுவதுமான எமது சமூகங்கள் அனைத்தையும் வளப்படுத்துவதில் அவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பையும் கொண்டாடுவோம். ஈழத்தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பையும் மனித உரிமை மீறல்களையும் தொடர்ந்துகொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பையும் ஒரு போதும் மறக்கமாட்டோம் என பதிவிட்டுள்ளார்.மாவீரர்களினதும் மக்களினதும் தியாகத்தால் உருவாக்கப்பட்ட தமிழீழத் தேசியக்கொடியை உலகின் அங்கீகாரத்திற்கு எடுத்துச் செல்லும் முதற்படியாக இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement