• May 06 2024

நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கின்றன, ஆனால் தீர்ப்புகள் தாமதமாகின்றன - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஆதங்கம்..!samugammedia

Tharun / Nov 22nd 2023, 8:47 pm
image

Advertisement

இந்நாட்டில் லஞ்சம், ஊழல், மோசடி நிலைமைகள் மாற்றமடையவில்லை. இதற்கு காரணம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் நிலுவையாக உள்ளன. தீர்ப்புகள் தாமதமாகி வருகிறது. இதுவே குற்றங்கள் அதிகரிக்க காரணம்  என இன்றைய பாராளுமன்ற  அமர்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் 

நான் ஜனாதிபதியாக பதவி வகிக்கையில், நான் ஜனாதிபதி அலுவலகத்தில் அதிக செலவு செய்தாக சில ஊடகங்கள் கருத்து வெளியிட்டன. அதை நான்  ஏற்றுக்கொள்கிறேன். அது நான் சாப்பிட்டு வந்த செலவு அல்ல, மாறாக நான் செயற்படுத்திய திட்டங்களுக்கான செலவுகளே அவை. நான் சுகாதார அமைச்சுக்கு அதிக செலவுகளை செலவிட்டேன். அத்துடன் சுற்றாடல் பாதுகாப்பு மேம்பாட்டு  திட்டங்களுக்கும்  அதிக தொகை செலவிட வேண்டி ஏற்பட்டது. 

இந்நாட்டிலே நான் 165 வர்த்தமான பத்திரிகைக்குக்கு கையொப்பம் இட்டு இருக்கின்றேன். வன பாதுகாப்பு மேம்படுத்தல் திட்டங்களை நான் மேற்கொண்டு இருக்கின்றேன். 2019க்கு முன்னர் நான் சிங்கராஜ வனத்தை பாதுகாத்து இருக்கிறேன். ஆனால் தற்போது அது நாசமாக்கப்பட்டு வருகிறது. 

சட்டரீதியற்ற முறையில் மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறுகிறது. இதனால் பாரிய அழிவு சேதங்கள் ஏற்படுகிறது. எது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அடுத்ததாக போதைப்பொருள் தடுப்பு திட்டத்திற்காக பாரிய நிதிச்செலவுகள் காணப்பட்டது. நாங்கள் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக தேசிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டோம். பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுத்தல் தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு பாரிய நிதியை செலவிட்டோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தோம். நாங்கள் செய்த பணிகளை இந்த அரசாங்கம் நிறுத்தி விட்ட்து. 

இந்நாட்டில் லஞ்சம், ஊழல், மோசடி நிலைமைகள் மாற்றமடையவில்லை. இதற்கு காரணம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் நிலுவையாக உள்ளன. தீர்ப்புகள் தாமதமாகி வருகிறது. இதுவே குற்றங்கள் அதிகரிக்க காரணம் ஆகும். இது எமது நாட்டுக்கு சிறந்தது அல்ல. இந்த நிலைமை மாற வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார் 


நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கின்றன, ஆனால் தீர்ப்புகள் தாமதமாகின்றன - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஆதங்கம்.samugammedia இந்நாட்டில் லஞ்சம், ஊழல், மோசடி நிலைமைகள் மாற்றமடையவில்லை. இதற்கு காரணம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் நிலுவையாக உள்ளன. தீர்ப்புகள் தாமதமாகி வருகிறது. இதுவே குற்றங்கள் அதிகரிக்க காரணம்  என இன்றைய பாராளுமன்ற  அமர்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் நான் ஜனாதிபதியாக பதவி வகிக்கையில், நான் ஜனாதிபதி அலுவலகத்தில் அதிக செலவு செய்தாக சில ஊடகங்கள் கருத்து வெளியிட்டன. அதை நான்  ஏற்றுக்கொள்கிறேன். அது நான் சாப்பிட்டு வந்த செலவு அல்ல, மாறாக நான் செயற்படுத்திய திட்டங்களுக்கான செலவுகளே அவை. நான் சுகாதார அமைச்சுக்கு அதிக செலவுகளை செலவிட்டேன். அத்துடன் சுற்றாடல் பாதுகாப்பு மேம்பாட்டு  திட்டங்களுக்கும்  அதிக தொகை செலவிட வேண்டி ஏற்பட்டது. இந்நாட்டிலே நான் 165 வர்த்தமான பத்திரிகைக்குக்கு கையொப்பம் இட்டு இருக்கின்றேன். வன பாதுகாப்பு மேம்படுத்தல் திட்டங்களை நான் மேற்கொண்டு இருக்கின்றேன். 2019க்கு முன்னர் நான் சிங்கராஜ வனத்தை பாதுகாத்து இருக்கிறேன். ஆனால் தற்போது அது நாசமாக்கப்பட்டு வருகிறது. சட்டரீதியற்ற முறையில் மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறுகிறது. இதனால் பாரிய அழிவு சேதங்கள் ஏற்படுகிறது. எது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அடுத்ததாக போதைப்பொருள் தடுப்பு திட்டத்திற்காக பாரிய நிதிச்செலவுகள் காணப்பட்டது. நாங்கள் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக தேசிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டோம். பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுத்தல் தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு பாரிய நிதியை செலவிட்டோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தோம். நாங்கள் செய்த பணிகளை இந்த அரசாங்கம் நிறுத்தி விட்ட்து. இந்நாட்டில் லஞ்சம், ஊழல், மோசடி நிலைமைகள் மாற்றமடையவில்லை. இதற்கு காரணம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் நிலுவையாக உள்ளன. தீர்ப்புகள் தாமதமாகி வருகிறது. இதுவே குற்றங்கள் அதிகரிக்க காரணம் ஆகும். இது எமது நாட்டுக்கு சிறந்தது அல்ல. இந்த நிலைமை மாற வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார் 

Advertisement

Advertisement

Advertisement