• Nov 26 2024

அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு! சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Dec 18th 2023, 8:27 am
image

 

அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய நேர்காணல் நடத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை அதற்கான நேர்முகத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 2019 ஆம் மற்றும் 2020 உயர்தரத்தில் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்களின் அடிப்படை தகுதிப் பரீட்சையை சுகாதார அமைச்சு மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர் பாடசாலைகளில் மாணவர் தாதியர் பயிற்சிக்கான விண்ணப்பங்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு பின்னர் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதற்கு நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு  அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய நேர்காணல் நடத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி, ஜனவரி 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை அதற்கான நேர்முகத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி, 2019 ஆம் மற்றும் 2020 உயர்தரத்தில் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்களின் அடிப்படை தகுதிப் பரீட்சையை சுகாதார அமைச்சு மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர் பாடசாலைகளில் மாணவர் தாதியர் பயிற்சிக்கான விண்ணப்பங்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக தகவல்களை சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு பின்னர் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இதற்கு நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement