• Mar 05 2025

பாதீட்டில் குறைக்கப்பட்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்; போராட்டத்தில் இறங்கிய பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்

Chithra / Mar 4th 2025, 2:27 pm
image



அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பிரகாரம் வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வாயிலிலும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஒரு மணி நேர கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு வழங்கப்பட்டு வருகின்ற கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும்,

ஆளணி பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த காலத்தில் தமக்கு வழங்கப்பட்டு வந்த சில கொடுப்பனவுகள் இம்முறை வரவு செலவு திட்டத்தில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருப்பதாகவும் சம்பள உயர்வு என்ற பெயரில் தமக்கான சம்பளம் குறைப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

பாடசாலை பல்கலைக்கழக வாயிலில் சுமார் 12 மணிக்கு ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் ஒரு மணி வரை இடம்பெற்றுந்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளையும் ஏந்தி இருந்தனர்.


இதேவேளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரும் இன்றையதினம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது "கல்வி சாரா ஊழியர் மாற்றான் பெற்ற பிள்ளையா", "நிரப்பு நிரப்பு வெற்றிடத்தை நிரப்பு", "முடக்குவோம் முடக்குவோம் பல்கலைக் கழகத்தை முடக்குவோம்", ' சீர் செய் சீர் செய் சம்பளத்தை சீர் செய்' என கோசங்களை எழுப்பியும், பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கையில் ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பாதீட்டில் குறைக்கப்பட்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்; போராட்டத்தில் இறங்கிய பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பிரகாரம் வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வாயிலிலும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஒரு மணி நேர கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு வழங்கப்பட்டு வருகின்ற கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும்,ஆளணி பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.கடந்த காலத்தில் தமக்கு வழங்கப்பட்டு வந்த சில கொடுப்பனவுகள் இம்முறை வரவு செலவு திட்டத்தில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருப்பதாகவும் சம்பள உயர்வு என்ற பெயரில் தமக்கான சம்பளம் குறைப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.பாடசாலை பல்கலைக்கழக வாயிலில் சுமார் 12 மணிக்கு ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் ஒரு மணி வரை இடம்பெற்றுந்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளையும் ஏந்தி இருந்தனர்.இதேவேளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரும் இன்றையதினம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது "கல்வி சாரா ஊழியர் மாற்றான் பெற்ற பிள்ளையா", "நிரப்பு நிரப்பு வெற்றிடத்தை நிரப்பு", "முடக்குவோம் முடக்குவோம் பல்கலைக் கழகத்தை முடக்குவோம்", ' சீர் செய் சீர் செய் சம்பளத்தை சீர் செய்' என கோசங்களை எழுப்பியும், பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கையில் ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement