• Nov 22 2024

இந்தியாவுடனான உறவுகள் மேலும் வலுவடையும் - ஜனாதிபதி ரணில் உறுதி..!samugammedia

mathuri / Feb 13th 2024, 6:32 am
image

இந்தியா மற்றும் இலங்கையிடையே உள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விடயமே  பணப் பரிமாற்ற முறை ஆகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் கலந்துகொண்ட இலங்கை மற்றும் மொரீஷியஸில் ஒருங்கிணைந்த கட்டண சேவைகள் மற்றும் மொரீஷியஸில் ரூபே கார்ட் (RuPay  சேவைகளை ஆரம்பிக்கும் மாநாடு காணொளி மூலம் நேற்று இடம்பெற்றது.

குறித்த காணொளி மாநாட்டிலேயே ஜெகபதி ரணில் இவ்விடயம்  விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “எனது இந்திய விஜயத்தின் போது தொலைநோக்கு பார்வையை இலக்காக கொண்டு பல விடயங்களை ஆராய்ந்திருந்தேன். அத்துடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விடயமே இந்த பணப் பரிமாற்ற முறை ஆகும்.

இது எமக்கு மிகவும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன்மூலம் தமிழ்நாடு, மும்பை ஆகியவற்றுடன் இலங்கை தொடர்புகளை ஏற்படுத்த முடியும். இதனால் 4 இலட்சம் வர்த்தகர்கள் பயனடைவார்கள். இந்திய வெளியுறவு அமைச்சருடனான பேச்சுவார்த்தை நம்பிக்கைக்குரிய முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகின்றது.

குறிப்பாக மொரீஷியஸுடனான ஒத்துழைப்பின் ஊடாக புதிய தொடர்புகளை மேம்படுத்தும் முயற்சியை இந்த பணப்பரிமாற்ற முறை மேலும் உறுதிசெய்யும்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடனான உறவுகள் மேலும் வலுவடையும் - ஜனாதிபதி ரணில் உறுதி.samugammedia இந்தியா மற்றும் இலங்கையிடையே உள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விடயமே  பணப் பரிமாற்ற முறை ஆகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் கலந்துகொண்ட இலங்கை மற்றும் மொரீஷியஸில் ஒருங்கிணைந்த கட்டண சேவைகள் மற்றும் மொரீஷியஸில் ரூபே கார்ட் (RuPay  சேவைகளை ஆரம்பிக்கும் மாநாடு காணொளி மூலம் நேற்று இடம்பெற்றது.குறித்த காணொளி மாநாட்டிலேயே ஜெகபதி ரணில் இவ்விடயம்  விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “எனது இந்திய விஜயத்தின் போது தொலைநோக்கு பார்வையை இலக்காக கொண்டு பல விடயங்களை ஆராய்ந்திருந்தேன். அத்துடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விடயமே இந்த பணப் பரிமாற்ற முறை ஆகும்.இது எமக்கு மிகவும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன்மூலம் தமிழ்நாடு, மும்பை ஆகியவற்றுடன் இலங்கை தொடர்புகளை ஏற்படுத்த முடியும். இதனால் 4 இலட்சம் வர்த்தகர்கள் பயனடைவார்கள். இந்திய வெளியுறவு அமைச்சருடனான பேச்சுவார்த்தை நம்பிக்கைக்குரிய முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகின்றது.குறிப்பாக மொரீஷியஸுடனான ஒத்துழைப்பின் ஊடாக புதிய தொடர்புகளை மேம்படுத்தும் முயற்சியை இந்த பணப்பரிமாற்ற முறை மேலும் உறுதிசெய்யும்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement