• Apr 19 2024

உறவினர்கள் சூழ, வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்!

Tamil nila / Feb 2nd 2023, 9:24 pm
image

Advertisement

கட்டிட தொழிலாளியும் தேன்மொழியின் (28) கணவருமான ரமேஷ் (வயது 35) என்பவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் குச்சிக்காடு பகுதியில் வசித்து வந்துள்ளார்.


இவர்கள் கடந்த சில வருடங்களாக வீட்டில் பைரவன் என்ற ஆண் நாய் மற்றும் பைரவி என்ற பெண் நாய் ஆகிய 2 நாய்களை செல்லமாக வளர்த்து வந்துள்ளனர்.


இதில் பெண் நாய் பைரவி கர்ப்பம் அடைந்தது தெரிய வந்துள்ளதையடுத்த ரமேஷ் குடும்பத்தினர் பைரவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளனர்.


அதன்படி நேற்று பைரவிக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.


அருகில் இருந்த உறவினர்களும் வந்திருந்து வளைகாப்பில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வளையல், பூ, சந்தனம், குங்குமம் உள்ளிட்டவைகளை அணிவித்து பைரவிக்கு வளைகாப்பு நடத்தினர்.


அத்தோடு தக்காளி, எலுமிச்சை, புளி உள்பட 3 கலவை சாதம், இனிப்பு வகையில் கச்சாயம், கார வகையில் போண்டா, அப்பளம் உள்ளிட்டவைகளை தலைவாழை இலையில் வைத்து பரிமாறினர்.


வளைகாப்பில் கலந்து கொண்ட உறவினர்கள் மொய் பணம் வைத்தனர். தங்கள் வீட்டு பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல் நாய்க்கு வளைகாப்பு நடத்திய ரமேஷ் குடும்பத்தினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர். 

உறவினர்கள் சூழ, வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர் கட்டிட தொழிலாளியும் தேன்மொழியின் (28) கணவருமான ரமேஷ் (வயது 35) என்பவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் குச்சிக்காடு பகுதியில் வசித்து வந்துள்ளார்.இவர்கள் கடந்த சில வருடங்களாக வீட்டில் பைரவன் என்ற ஆண் நாய் மற்றும் பைரவி என்ற பெண் நாய் ஆகிய 2 நாய்களை செல்லமாக வளர்த்து வந்துள்ளனர்.இதில் பெண் நாய் பைரவி கர்ப்பம் அடைந்தது தெரிய வந்துள்ளதையடுத்த ரமேஷ் குடும்பத்தினர் பைரவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளனர்.அதன்படி நேற்று பைரவிக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.அருகில் இருந்த உறவினர்களும் வந்திருந்து வளைகாப்பில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வளையல், பூ, சந்தனம், குங்குமம் உள்ளிட்டவைகளை அணிவித்து பைரவிக்கு வளைகாப்பு நடத்தினர்.அத்தோடு தக்காளி, எலுமிச்சை, புளி உள்பட 3 கலவை சாதம், இனிப்பு வகையில் கச்சாயம், கார வகையில் போண்டா, அப்பளம் உள்ளிட்டவைகளை தலைவாழை இலையில் வைத்து பரிமாறினர்.வளைகாப்பில் கலந்து கொண்ட உறவினர்கள் மொய் பணம் வைத்தனர். தங்கள் வீட்டு பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல் நாய்க்கு வளைகாப்பு நடத்திய ரமேஷ் குடும்பத்தினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர். 

Advertisement

Advertisement

Advertisement