• Sep 10 2025

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் குறித்த அறிக்கை இரண்டு நாட்களுக்குள்!

Chithra / Sep 9th 2025, 9:28 am
image

 

நாட்டின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் குறித்த சோதனை அறிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய பொருட்களின் மாதிரிகளை சோதிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் இந்திக வன்னிநாயக்க தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட  குற்றக் கும்பலின் உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மீத்தெனிய பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் தங்காலை பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் இதேபோன்ற பொருட்கள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் நேற்று (08) கந்தானை பகுதியிலும் இதேபோன்ற பொருட்கள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பொருட்களின் மாதிரிகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும், சோதனை விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திக வன்னிநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் குறித்த அறிக்கை இரண்டு நாட்களுக்குள்  நாட்டின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் குறித்த சோதனை அறிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.தொடர்புடைய பொருட்களின் மாதிரிகளை சோதிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் இந்திக வன்னிநாயக்க தெரிவித்தார்.இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட  குற்றக் கும்பலின் உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மீத்தெனிய பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் தங்காலை பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் இதேபோன்ற பொருட்கள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் நேற்று (08) கந்தானை பகுதியிலும் இதேபோன்ற பொருட்கள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.இந்த பொருட்களின் மாதிரிகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும், சோதனை விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திக வன்னிநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement